படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
ஜூன் 21. உலக இசை தின கவிதை.
கவிஞர் ப.கண்ணன்சேகர். திமிரி. பேச :9894976159.
அழுகின்ற மழலைக்கு அன்னையின் குரலால்
ஆராரோ இசைத்திட ஆறுதல் கொடுக்கும்!
உழுதிடப் பாடிடும் உழவனின் இசையினால்
உலகத்தார் பசியினை ஒழித்திட சிறக்கும்!
பழுத்த நல்கனியென பாடிடும் இசையினால்
பாரங்கள் நீங்கியே பக்குவம் கிடைக்கும்!
ஒழுங்கான வடிவாக உருவாக்கும் இசையாலே
உள்ளங்கள் மகிழ்ந்திட உலகத்தில் நிலைக்கும்!
உலகத்தின் இசையினில் உயர்வான இடமென
ஒப்பில்லா தமிழிசை ஒன்றென சொல்லிடு!
குலந்தோறும் கோவிலும் கொண்டாடும் இசையது
கொட்டிடும் மேளத்தை கூறியே மகிழ்ந்திடு!
தலமெங்கும் பாடியே தரணியின் முதலிசை
தமிழ்மொழி தேவார தடத்தினை காட்டிடு!
புலவரும் இசையோடு பொழிந்தநல் பாடலால்
பொன்பொருள் பரிசாக பெற்றதும் நம்நாடு!
உயிரினம் அனைத்தையும் உசுப்பிடும் இசைதான்
உலகினில் ஒலித்திட உள்ளத்தைக் கொய்திடும்!
கயிலையின் நாதனும் காட்டிய இசையெலாம்
கேட்போரின் மனதையே கொண்டாட செய்திடும்!
பயிர்பச்சை விளைந்திட பாடுகிற இசையாலே
பயனென சொன்னது பாரினில் அறிவியல்!
வெயில்தரும் வானத்தில் வேண்டிய மழைதனை
வசமாக்கும் இசையாலே வான்மேகம் பொழிந்திடும்!
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
ஜூன் 21. உலக இசை தின கவிதை.
கவிஞர் ப.கண்ணன்சேகர். திமிரி. பேச :9894976159.
அழுகின்ற மழலைக்கு அன்னையின் குரலால்
ஆராரோ இசைத்திட ஆறுதல் கொடுக்கும்!
உழுதிடப் பாடிடும் உழவனின் இசையினால்
உலகத்தார் பசியினை ஒழித்திட சிறக்கும்!
பழுத்த நல்கனியென பாடிடும் இசையினால்
பாரங்கள் நீங்கியே பக்குவம் கிடைக்கும்!
ஒழுங்கான வடிவாக உருவாக்கும் இசையாலே
உள்ளங்கள் மகிழ்ந்திட உலகத்தில் நிலைக்கும்!
உலகத்தின் இசையினில் உயர்வான இடமென
ஒப்பில்லா தமிழிசை ஒன்றென சொல்லிடு!
குலந்தோறும் கோவிலும் கொண்டாடும் இசையது
கொட்டிடும் மேளத்தை கூறியே மகிழ்ந்திடு!
தலமெங்கும் பாடியே தரணியின் முதலிசை
தமிழ்மொழி தேவார தடத்தினை காட்டிடு!
புலவரும் இசையோடு பொழிந்தநல் பாடலால்
பொன்பொருள் பரிசாக பெற்றதும் நம்நாடு!
உயிரினம் அனைத்தையும் உசுப்பிடும் இசைதான்
உலகினில் ஒலித்திட உள்ளத்தைக் கொய்திடும்!
கயிலையின் நாதனும் காட்டிய இசையெலாம்
கேட்போரின் மனதையே கொண்டாட செய்திடும்!
பயிர்பச்சை விளைந்திட பாடுகிற இசையாலே
பயனென சொன்னது பாரினில் அறிவியல்!
வெயில்தரும் வானத்தில் வேண்டிய மழைதனை
வசமாக்கும் இசையாலே வான்மேகம் பொழிந்திடும்!
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக