2013-2014 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் சோ.ந. கந்தசாமிக்குத் தொல்காப்பியர் விருது --


2013-2014 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழுக்கான விருதுகள் அறிவிப்பு : சோ.ந. கந்தசாமிக்குத் தொல்காப்பியர் விருது



2013-2014 ஆம் ஆண்டிற்கான  
செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள்

சோ.கந்தசாமிக்குத் 
தொல்காப்பியர் விருது 
-- 

.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத்தலைவர்விருதினை 2005 முதல் வழங்கி வருகிறதுகி.பி.600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம்,இலக்கணம்மொழியியல்மொழிபெயர்ப்புவரலாறுநுண்கலைகள்கட்டடவியல்,தொல்பொருளியல்நாணயவியல்கல்வெட்டியல்சுவடியியல்பண்பாடு முதலிய துறைகளில்ஆய்வுகள் செய்து செம்மொழித் தமிழுக்குத் தலைசிறந்த பங்களிப்பினை வழங்கிவரும் சிறந்தஅறிஞர்களுக்கு இவ்விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது2013-2014 ஆம் ஆண்டிற்கானசெம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் விருது
2013-2014 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.கந்தசாமிஅவர்களுக்கு வழங்கப்படுகிறதுதொல்காப்பியர் விருதுடன் ஐந்நூறாயிரம் உரூபாய்ப்பரிசுத்தொகையும் நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
சோ.கந்தசாமி அவர்கள் இலக்கணஇலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர். 45ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பிற கல்விநிறுவனங்களிலும் ஆய்வுப்பணி, கல்விப் பணியாற்றிவர்ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும்மெய்ப்பொருள் சிந்தனைகளை இந்தியத் தத்துவச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இந்தியத்தத்துவத்திற்குத் தமிழின் பங்களிப்புபற்றி விளக்கியுள்ளார். ‘தொல்காப்பியமும் சங்கஇலக்கியமும் என்ற பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்தமிழ்வடமொழிபாலி,பிராகிருதம்இந்தி இலக்கியம்இலக்கணம்தத்துவம்மொழியியல் ஆகிய துறைகளில்புலமை பெற்றவர்தொல்காப்பியத் தெளிவுதமிழிலக்கணச் செல்வம்தெய்வச்சிலையார்உரைத்திறம்செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்குறுந்தொகை ஆய்வுகள் போன்றசெவ்விலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்உலக மொழிகள் இலக்கியம்உலகத்தமிழ் இலக்கிய வரலாறுதிருக்குறள் கூறும் உறுதிப்பொருள்குறுந்தொகைத் திறனாய்வு,மணிமேகலையின் காலம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 2014 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப் பெற்றுள்ள தொல்காப்பியர் இருக்கையின் மதிப்புறுபேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்பல்வேறு கருத்தரங்குகள்மாநாடுகளில்கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்.  
இளம் அறிஞர் விருது
2013-2014 ஆம் ஆண்டிற்கான முப்பது வயதிற்கும் நாற்பது வயதிற்கும் இடைப்பட்டஇந்தியர்களுக்கு உரிய இளம் அறிஞர் விருதுகள்:
1.      முனைவர் உலபாலசுப்பிரமணியன்
2.      முனைவர் கலைசெழியன்
3.      முனைவர் சோஇராசலட்சுமி
4.      முனைவர் மகாலட்சுமி
5.      முனைவர்சௌபாசாலாவாணிசிரீ
ஆகிய அறிஞர்களுக்கு வழங்கப்படுகின்றனஇளம் அறிஞர் விருதுடன் நூறாயிரம் உரூபாய்ப்பரிசுத்தொகையும் நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களால் குடியரசுத் தலைவர் மாளிகையில்நடைபெறும் விழாவின் போது வழங்கப்படும்.

 [
The Central Institute of Classical Tamil has been presenting Presential Awards to Scholars every year from 2005.
Tholkappiyar Award (includes a certificate of honour, a memento and cash a Rs. 5 lakh) – one award for Indian nationals.
Prof. S.N. Kandaswami has been chosen for the Tholkappiyar Award for 2013-14. He will receive a certificate of merit and a cash award of Rs 5 lakh.
Prof. S.N. Kandaswami is a well-known versatile scholar who has more than fifty books and numerous research articles to his credit. He is a polyglot who is well-acquainted with the classics in Tamil, Sanskrit, Pali, Prakrit and Hindi. An expert in grammar, philosophy and linguistics, he has authored the following books:
Tolkāppiyat teivu, Tami  Ilakkaac celvam, Teyvaccilaiyār urait tiam, Tami Ilakkiyac celvam, Cevviyal Ilakkiya āyvuka, Kuuntokai āyvuka, Ulaka moika Ilakkiyam, Ulakat TamiIlakkiya varalāu, Maimēkalaiyi kālam, Tirukkua kūum uutipporu, Kuuntokait tiaāyvu.

Having made a thorough study of the philosophical ideas found in the ancient Tamil Classics, he has written extensively about the contribution of the Tamils to Indian Philosophy.
Since 18th December 2014, he has been occupying the distinguished Tolkāppiyar Chair Instituted in the Tamil University, Thanjavur. He has also served in Annamalai University, and other reputed institutions.
2013-14  Presidential Awards for Classical Tamil Young Scholar Awards
1.      Dr. Ula. Balasubramanian,
2.      Dr. Kalai Sezhiyan,
3.      Dr. S. Rajalakshmi,
4.      Dr. T. Mahalakshmi,
5.      Dr. S. P. Salavanisri,
These are young research scholars actively involved in the promotion of Classical Tamil. Each of them will receive a certificate of merit and a cash award of Rs 1 lakh.
These awards will be presented to them by the President of India at the President’s residence in a function. ]


- முகிலை இராசபாண்டியன், பதிவாளர் 

-- 
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்