பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! தமிழா தமிழனா இரு ! கவிஞர் இரா .இரவி !



பெங்களூருத்  தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

தமிழா தமிழனா இரு !  கவிஞர் இரா .இரவி !

ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதை நிறுத்து 
அழகு தமிழில் கையொப்பம் இட்டுப் பழகு !
                                                                                                                
ஆங்கிலத்தில் முன் எழுத்து எழுதுவதை நிறுத்து 
அற்புதத் தமிழில் முன் எழுத்தை எழுது !      
                        
தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்து 
தமிழர்களிடம் தமிழில் பேச என்ன தயக்கம்?

தமிங்கிலம் பேசும் தமிழ்க் கொலையை நிறுத்து
தமிழில் ஆங்கிலச் சொல் கலப்பின்றிப் பேசு !

குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர் வைப்பதை நிறுத்து 
குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்டு!

மம்மி டாடி என்றழைப்பதை உடனே நிறுத்து 
மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் !

அம்மா அப்பா என்றே அழகு தமிழ் அழைக்கட்டும்  
ஆங்கில மோகம் தமிழன் மனம் விட்டு அகலட்டும் !

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழைக்  கற்றிடு 
ஒலிக்கும் மொழி வீட்டில் தமிழாகவே இருக்கட்டும் !.

தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்
தமிழனாகப் பிறக்க ஆசைபட்டார் தேசப்பிதா !

உலகப் பொது மறையை உலகிற்கு தந்தது தமிழ் 
உலகிற்கு பண்பாட்டைக் கற்பித்தது நம்தமிழ் !

தொல்காப்பியம் அகத்தியம் ஹைக்கூ கண்ட  தமிழ் 
தொன்மையான உணமையான ஆதி மொழி தமிழ் !

ஆங்கில அறிஞர்களும் தமிழை நேசிக்கின்றனர் 
அவர்கள் அறிந்த பெருமையை  தமிழா அறிந்திடு !

மலையாளத்தார் மலையாளியாகவே வாழ்கின்றனர் 
கன்னடத்தார் கன்னடராகவே வாழ்கின்றனர் !

தமிழர் மட்டும் தமிழராய் வாழ்வதில்லை ஏன் ?
தமிழா தமிழராக வாழ்வது நமது கடமை !

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 
தரணிப் போற்றும் வைர வரிகளை உணர்ந்திடு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்