கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !

கவியமுதம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி !
விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
------------------------------------------------
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- 
பேச 044 24342810 . 24310769.
-------------------------------------


நூலின் பெயரோடு சேர்த்து, நூல் தொடக்கமும் வெகு அருமையாக அமைந்துள்ளது....கவியமுதம் என்ற பெயருக்கு தகுந்தாற் போலவே கிட்டா அமுதாகவே ஒவ்வொரு கவிதையும் அசத்தலாய் அமைந்துள்ளது...தனி சிறப்பு....

முதல் பகுதியே, நம்பிக்கை வானில் சிறகுகளோடு விரிகிறது.... கூடவே வாசகர்களையும் கைகோர்த்து பறக்கிறது....
"திண்ணையை இடித்து தெருவாக்கு"..."மேலும் உன் தெருவை விரிவாக்கு" என்ற கவிஞர் தாராபாரதியின் வரிகளுக்கு நிகரான வைர வரிகளாகவே, தன்னம்பிக்கைகான மொத்த வரிகளும் அமைந்துள்ளது....கூடவே தன்னம்பிக்கையையும் ஊட்டிச் செல்கிறது..

தமிழ் மொழியின் சிறப்புகளையும், பெருமைகளையும்...மிக அழகாய் எடுத்துரைத்திருக்கிறார்கள்....

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளில் ஏற்ப்பட்ட மேனாட்டு மோகத்தை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார்கள்....இது போன்றதொரு நல்ல நூலை படிக்கையில், மெல்ல சாகும் தமிழ் என்ற வாக்கியம் இனி திரும்பப்பெறப்படும்....

உலக மக்கள் அனைவருக்கும் நீதி நூலாக விளங்கும் திருக்குறளுக்கு புகழாரம் சேர்த்துள்ளார்கள்..திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி வாதத்தையும், அதற்கான விளக்கத்தையும் தெளிவாய் எடுத்து அறிவுறுத்தியிருக்கிறார் கவிஞர்....காமராசர், அண்ணா போன்றோர்களின் மகத்தான பணிகளையும், சேவைகளையும் கூறி, அவர்கள் வழியில் தன்னலமின்றி நடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

தென்ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிராக நடந்த சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்த தில்லையாடி வள்ளியம்மை அவர்களை நினைவுப்படுத்தியிருப்பது போற்றத்தக்கது...கண்ணதாசன், வாலி,டி எம் எஸ் போன்றவர்களை பற்றிய பதிவுகளும்,
வியக்கச்செய்கிறது....இன்னும் பலருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒவ்வொரு கவிதையும் பின்னப்பட்டிருப்பது....சிறப்பு....

காதல், பெண்ணின் பெருமை,குழந்தை தொழிலாளர் களைதல், விழிப்புணர்வு, உழைப்பாளர்களின் சங்கடங்கள், மதுரையின் பெருமைகள், சாதிய கொலைகள், சாதி வெறி, சேமித்தலின் அவசியம், தந்தி, வாடகை வீடு போன்றவைகள் பற்றிய பல்வேறு கோணங்களிலும், பார்வைகளிலும் பேசுகிறது 
படைப்பு.....கவனமாய் கோர்த்த கதம்ப மாலையாக, இந்நூல் அமைந்திருப்பது அதிசயம்....இறுதியில் நல்ல நூல் படித்த திருப்தியை தந்து செல்கிறது படைப்பு.... 


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்