நன்றி ! பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி ! பாக்யா வார இதழ் !அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

இது என்ன பார்வை ?
காதல் பார்வையா ?
கோபப் பார்வையா ?
-------
இது என்ன தலை விரி கோலம்
நீதி கேட்டு
நெடும் பயணமா ?
------------------
அமைதியாகத் தொண்டு செய்வதாக
அறிந்தேன் தொடருங்கள்
பாராட்டுகள் !
------------------
பெண்ணிற்கு உண்மை அழகு
பொன்னகையன்று
புன்னகைதான் !
------------------
ஆடிப்பாடி நடித்தது போதும்
அடுத்த படம்
பெண்மைப் போற்றும் படமாகட்டும் !

கருத்துகள்