தினமணி இணையம் தந்த தலைப்பு ! காகிதக் கப்பல் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

காகிதக் கப்பல் !  கவிஞர் இரா .இரவி !

பெரியோர்களுக்கு காகிதம் 
சிறுவர்களுக்கு கப்பல் 
காகிதக் கப்பல் ! 

மழைக்காகக் காத்திருந்து 
கைகளால் செய்து விடுவது சுகம் 
காகிதக் கப்பல் ! 

சுனாமி பயம் இல்லை 
மாலுமி இல்லாத பயணம் 
காகிதக் கப்பல் ! 

சாதாக்கப்பலும்  உண்டு 
கத்திக்கப்பலும் உண்டு 
காகிதக் கப்பல் ! 

மழை இல்லாவிடினும் 
தேங்கிய நீரிலும் விடுவதுண்டு
காகிதக் கப்பல் ! 

செய்து கொடுத்தும் 
சிறுவன் முகத்தில் மலர்ச்சி 
காகிதக் கப்பல் ! 

கூடவே பயணிக்கும் 
குழந்தையின் மனசும் 
காகிதக் கப்பல் ! 

செய்யத் தெரியாது என்றால் 
சிரித்திடுவார்கள்  சிறுவர்கள் 
காகிதக் கப்பல் ! 

மழை விட்டபின் 
தொடங்கும் பயணம் 
காகிதக் கப்பல் ! 
.
நாளைய மாலுமியின்
இன்றைய முன்னோட்டம் 
காகிதக் கப்பல் ! 

முக்கியமான காகிதத்தில் செய்து 
அடிவாங்கிய அனுபமுண்டு 
காகிதக் கப்பல் ! 

கருத்துகள்