பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! மக்களாட்சி ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் தந்த தலைப்பு !

மக்களாட்சி ! கவிஞர் இரா .இரவி !

பெரிய பேரு 
தாகத்திற்கு தண்ணீர் இல்லை 
மக்களாட்சி ! 

பார்வை இருந்தும் 
பார்வையற்று  தேர்ந்தெடுப்பது 
மக்களாட்சி ! 

கோடிகள் கொள்ளையடிக்க 
கொடுக்கும் அங்கீகாரம் 
மக்களாட்சி ! 

உலகில் பெரிய நாடு மட்டுமல்ல 
ஊழலில் பெரிய நாடு
மக்களாட்சி ! 

இக்கரைக்கு அக்கரைப்   பச்சை 
தேவலாம் மன்னராட்சி  
மக்களாட்சி ! 

ஆசைக்காட்டி 
மோசம் செய்தல்   
மக்களாட்சி ! 

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 
தேர்தல் நாள் மட்டுமே 
மக்களாட்சி ! 

சேவைக்காக அன்று 
தேவைக்காக இன்று 
மக்களாட்சி ! 
.
மூட நம்பிக்கையில் 
ஒன்றானது 
மக்களாட்சி ! 

ஆட்சி மாறினாலும் 
காட்சி மாறுவதில்லை 
மக்களாட்சி ! 

சனநாயகம் அன்று 
பணநாயகமே இன்று 
மக்களாட்சி ! 

ஒழிப்பதாகச் சொல்வார்கள் 
ஒழிக்க மாட்டார்கள் வறுமை 
மக்களாட்சி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்