தந்தையின் தொண்டே தலை ! கவிஞர் இரா .இரவி !

தந்தையின் தொண்டே தலை ! கவிஞர் இரா .இரவி !

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
தரணியில் உணராத மாந்தர்  இல்லை !

தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர் 
தன்னலமற்றவர் குடும்பநலம் பேணுபவர் !

உழைத்து உழைத்து ஓடானபோதும் அவர் 
ஒருபோதும் சலித்துக் கொள்வதில்லை !

குடும்பத் தலைவர் என்ற பொறுப்பால்
குடும்பம் காக்கப் பொறுப்பாக உழைப்பவர் !

தன் மகிழ்ச்சியைத் தள்ளி வைத்து விட்டு 
தன் குடும்ப மகிழ்ச்சிக்குக் காரணமானவர் !

குடும்பத்திற்காக அவமானங்களை ஏற்றவர் 
கூறிய பணிகளை செய்து முடித்தவர் !

தன்மானத்தையும் ஒதிக்கி வைத்து விட்டு 
தன்  குடும்பத்திற்காக பொறுமை காப்பவர் !

அறச்சீற்றத்தையும் அப்படியே தணித்து விட்டு 
அன்பான குடும்பத்திற்காக தவவாழ்வு வாழ்பவர் !

சோதனைகள் வந்தபோதும் சோர்ந்திடாமல் 
சொக்கத் தங்கமாக வாழும் நல்லவர் !

சோகங்கள் வந்தபோதும் சோம்பிடாமல் 
சுறுசுறுப்போடு உழைத்து வருபவர் !

குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு 
குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை !

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்