பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! சிறைச்சாலை ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் தந்த தலைப்பு !

சிறைச்சாலை ! கவிஞர் இரா .இரவி !

இருக்கின்றனர் 
குற்றமற்றவர்களும் 
சிறைச்சாலை ! 

அகிம்சைவாதிகள் 
மறுப்பின்றி சென்ற இடம் 
சிறைச்சாலை ! 

திருந்துவோர் பலர் 
திருந்தாதோர் சிலர் 
சிறைச்சாலை ! 

பலருக்கு 
போதிமரம் 
சிறைச்சாலை ! 

சிலருக்கு 
பொழுதுப் போக்குமிடம் 
சிறைச்சாலை !   

குற்றமற்றவர்கள் 
குமுறுமிடம்
சிறைச்சாலை ! 

அரிய நூல்கள் 
உருவான இடம் 
சிறைச்சாலை ! 

குதூகலத்தில் 
குற்றவாளிகள் 
சிறைச்சாலை ! 

மிருக குணமகற்றி   
மனிதனாக்கும் தவச்சாலை 
சிறைச்சாலை ! 

நூலகமாயிருந்து 
நூல் எழுதிட வைத்தது 
சிறைச்சாலை ! 

ஆதிக்கவாதிகளின் 
மிரட்டல் ஆயுதம் 
சிறைச்சாலை ! 
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்