நன்றி .பாக்யா வார இதழ் !
படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
பசி பசி என்றால்
புடைத்து உலை வைத்து
பொங்கித்தான் பசியாறவேண்டும்
அரிசியில் கல் இருக்கும்
சொல்வார்கள் ஆனால்
கல்லில் அரிசி உள்ளன !
குத்த வச்ச மனுசா
உலையை வச்சா
சோறு பொங்கலாம் !
அரிசிகள் அந்தரத்தில் நிற்கின்றன
பறை சாற்றுகின்றன
புகைப்படக் கலைஞரின் திறனை !
புடைக்காமல்
சோறு ஆக்கினால்
கத்துவாய் கல் என்று !
தின்னாதே அரிசி
மழை வரும்
எழுபதாம் திருமணத்தில் !
முதுமையிலும்
இணை பிரியாத இணையர்
இளையோருக்குப் பாடம் !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்
கருத்துரையிடுக