தீபத்தின் ஒளியில் ! கவிஞர் இரா .இரவி !
தீபத்தின் ஒளியில் இருள் விலகும்
தன்னம்பிக்கை ஒளி எங்கும் பரவும் !
மின்சார விளக்கின்றி தீபஒளியில் படித்து
மேதைகள் ஆனவர்கள் பலர் உண்டு !
வறுமை வாட்டிய போதும் வருந்தாது
விளக்கொளியில் படித்து சாதித்தோர் உண்டு !
குடிசை வீடு மின்வசதி இல்லை ஆனாலும்
குவலயத்தில் சிறந்து விளங்கியோர் உண்டு !
தெரு விளக்கில் படித்து உலகில்
திறம்பட வாழ்ந்து சிறந்தோர் உண்டு !
இருட்டு இருட்டு எண்டு புலம்புவது விடுத்து
எடுத்து ஒரு தீபத்தை ஏற்றுவது சிறப்பு !
தீபத்தின் ஒளியில் தெரியும் தாயின் முகம்
தாய்ப்பாசத்தைக் காட்டிப் பிரகாசிக்கும் !
தீபத்தின் ஒளியில் தெரியும் காதலி முகம்
தரணிக்கு வந்த நிலவாக ஒளிரும் !
தீபத்தின் ஒளியில் தெரியும் குழந்தை முகம்
தவிக்கும் மனங்களுக்கு ஆறுதல் தரும் !
எடிசன் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்
இன்றும் தீபத்தின் ஒளியே ஒளியாக இருந்திருக்கும் !
மின்தடைகள் வரும்போதெல்லாம் இன்றும்
மாநிலத்தில் பயன்படுவது தீபத்தின் ஒளியே !
தீபத்தின் ஒளியில் அன்றும் படித்தனர்
தீபத்தின் ஒளியில் இன்றும் படிக்கின்றனர் !
உலகமயத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை
ஒளிரும் தீபத்தின் ஒளியை ! என்றும் ஒளிரும் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக