அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
தலையில் கவலையை
ஏற்றினால் விரைவில்
எலும்புக் கூடாவாய் !
கோட்டை கொத்தளம்
எதுவும் நிரந்தரமன்று
நிலையாமையே வாழ்க்கை !
கயல்விழியால்
கடைக்கண் பார்வையால்
இந்நிலையோ ?
பரிணாம வீழ்ச்சி
மனிதன்
குரங்காகுகின்றான் !
மண்ணிற்கு இரையாகும் உடல்
மனதினில் எதற்கு
ஆணவம் ?
அழகி செய்த மாயமோ
ஆடவன் நிலை
இப்படி ஆனதோ ?
கருத்துகள்
கருத்துரையிடுக