பாக்யா அட்டைப்படதிற்கு ! கவிஞர் இரா .இரவி!


பாக்யா  அட்டைப்படதிற்கு   ! கவிஞர் இரா .இரவி!

என்ன பார்வை ஓரப்பார்வை 
பறவைகள் பரவசம் 
பாவையோ பழரசம் !

கோடை வெயில்
தாக்கத்திருக்க 
குடையாய் தொப்பி  !

இலவசம்தானே 
செலவு இல்லையே 
புன்னகை  புரிந்தாலென்ன ?

தங்க நகையை விட 
பாசி நகையே 
நங்கைக்கு அழகு !

பாவையே என்ன சொன்னாய் 
பறவைகளிடம் 
களி நடனம் புரிகின்றன  !

வன தேவதையே 
சைவமாக மாறுங்கள் என்று 
வேண்டுகோள் வைக்கின்றாயோ ?

உண்மையே 
ஆள் பாதி ஆடை பாதி 
அழகாக்கியது ஆடை !

வளையல் அணிந்துள்ள வஞ்சியே
வனப்பில் விஞ்சினாய்
ரதியை !

காடு அதை நாடு
விலங்குகளை வதைக்காமல் நாடு
பிறக்கும் மகிழ்ச்சி !
.
காதலன் வருகைக்காய் 
காத்திருக்கும் பெண்ணே 
வருவான் கண்களை மூடு !     

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்