படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
தண்ணீரில் முகம் பார்க்கும் பெண்ணே !
சின்னப் புன்னகையை
சிரிப்பாக விரிவு செய் !
தனிமையில் இனிமை காணும் பெண்ணே
தலைவன் வந்தால்
இன்னும் இன்பம் !
பெண்கள் இட ஒதிக்கீடு சட்டம்
நிறைவேறாத வருத்தமா உனக்கு ?
நிறைவேறும் வேண்டாம் கவலை !
குளத்தில் நீந்தும் மீன்களை ரசிக்கும்
கன்னியே உன் கண்களில் தெரிவதும்
மீன்களே !
மரங்களின் நிழலோ தண்ணீரில்
மங்கையின் நினைவோ
தலைவன் மீது !
கருத்துகள்
கருத்துரையிடுக