உழைப்பே உன்னதம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு  ! 

உழைப்பே உன்னதம் !        கவிஞர் இரா .இரவி !

உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் 
உண்பது உண்மையில் உன்னத இன்பம் !

அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் 
அருகே அமர்ந்து உண்பது இழுக்கு !

அப்பா தந்த சொத்தை வைத்து சோம்பேறியாக 
அலுப்பின்றி உழைக்காமல் உண்பது இழுக்கு !

உருக்கினால்தான் தங்கம் நகையாக முடியும் 
உழைத்தால்தான் மனிதன் மனிதனாக முடியும் !

செதுக்கினாலதான் கல் சிலையாக மாறும் 
சிந்தித்து உழைத்தால்தான் சிறந்திட இயலும் !

தீக்காயம் பட்டால்தான் புல்லாங்குழல் வரும் 
தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் புகழ் வரும் !

பஞ்சு நூற்றால்தான் நூலக உருவாகும் 
பணிந்து உழைத்தால்தான் பண்பு உருவாகும் !

மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும் 
மனிதனுக்கு உழைப்புத்தான் மேன்மையைத் தரும் !

யானைக்கு தந்தம் கம்பீரம் நல்கும் 
யாருக்கும் உழைப்புத்தான் பெருமை நல்கும் !

அடுத்தவர் உழைப்பில் பிரியாணி உண்பதை விட 
அவரவர் உழைப்பில் கூழ்  குடிப்பதே மேல் !

சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடிக்கும் 
சும்மா இருந்தால் மனிதன் சிறுதுரும்புதான் !

மூச்சு இருக்கும் வரை வேண்டும் உழைப்பு 
முடிந்த பணியினைச் செய்து வாழ்வதே சிறப்பு !

உடலை நோயின்றி காப்பது உழைப்பு 
உடலுக்கு நலம் நல்குவது உழைப்பு  !

உழைத்தால் இரவு உறக்கம் உறுதி 
உழைக்காவிடில் உறக்கம் உறுதியன்று !

மனதிற்கு மகிழ்ச்சித் தருவது உழைப்பு 
மனதைச் செம்மையாக்குவது  உழைப்பு !

உலகில் உழைப்பே உன்னதம் உணர்ந்திடுக 
உலகம் இயங்குவதே உழைப்பால்தான் அறிந்திடுக !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்