வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழா- “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மை - பன்னாட்டுக் கருத்தரங்கம் - ஆய்வுக் கட்டுரைகள் - பதிவுக் கட்டணம் இன்றி வரவேற்கப்படுகின்றன


வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழா- “வ.சுப.மாணிக்கனாரின்
பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மை - பன்னாட்டுக் கருத்தரங்கம் -
ஆய்வுக் கட்டுரைகள் - பதிவுக் கட்டணம் இன்றி வரவேற்கப்படுகின்றன



பெருமைமிகு தமிழறிஞர்கள்,

பெருமைமிகு பேராசிரியர்கள்,

பெருமைமிகு ஆய்வாளர்கள்,

பெருமைமிகு தமிழ் ஆர்வலர்கள் 



பேரன்புடையீர்,

          அனைவருக்கும் வணக்கம்.

எம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்
வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத்
தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக  எதிர்வரும் ஆகஸ்ட்டு - (2016)
திங்கள் துணைவேந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும்,
“வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை
வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே, மதிப்பிற்குரிய  துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள
தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள்
துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள்
தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம்.
ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும் இன்றி
வரவேற்கப்படுகின்றன.

ஆய்வுக் கட்டுரை பாமினி எழுத்துருவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 1.5
இடைவெளியிட்டு எதிர்வரும் 30.06.2016 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட EMAIL:
tamilkanikani@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு
அன்புடன் வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்> ஆங்கிலத்தில்
அமையலாம்.

துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா மலர் ஒன்றும் வெளியிட
இருப்பதால் அவர் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள் இன்னும் பிற தகவல்கள்
கிடைத்தால் கீக்கண்ட மின்னஞசல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் மிகச்
சிறப்பாக இருக்கும.; எனவே, ஆர்வலர்கள் அனுப்பிவைக்கும் தகவல்கள் விழா
மலரில் இடம்பெறச் செய்வதோடு, நன்றி மறவாமல் கொடுத்து உதவியவர்களின் பெயர்
விழா மலரில் பதிவுசெய்யப்பெறும் என்பதை அன்போடு பதிவுசெய்கிறேன்.

குறிப்பு: ஆய்வுக் கட்டுரை எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற பிறகு விழா
நடக்கும் உரிய தேதிகள் மற்றும் பிற தகவல்கள் முறையாக
அனுப்பிவைக்கப்பெறும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்குத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு தங்களின் அன்பான ஒத்துழைப்பையும்
வரவையும்  எதிர்நோக்கும்



நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

முனைவர் போ.சத்தியமூர்த்தி

உதவிப்பேராசிரியர்

தமிழியல்துறை

தமிழியற்புலம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை - 625 021

தெலைபேசி: +91 –94 88 61 61 00

Email : tamilkanikani@gmail.com
Thank You & Best Regards
முனைவர் போ. சத்தியமூர்த்தி
Dr B.SATHIYAMOORTHY
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம்
Assistant Professor, Department of Tamilology, School of Tamil studies
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625021
Madurai Kamaraj University, Madurai - 625021, Tamil Nadu, India
Phone (+91) 9488616100

கருத்துகள்