படித்ததில் பிடித்தது ! ! கவிஞர் இரா.இரவி ! மே-8. அன்னையர் தினம்! கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி. 9894976159.

படித்ததில் பிடித்தது ! ! கவிஞர் இரா.இரவி !
மே-8. அன்னையர் தினம்!
கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி. 9894976159.
படைத்திடும் இறைவனை படைப்பவள் பெண்ணே
பாரினில் தாய்தனை பாராட்டி போற்றிடு!
விடையென வாழ்வில் விளங்கிடும் உறவால்
விண்ணின் நிலவென வெளிச்சம் பார்த்திடு!
குடையென நிழலாய் குடும்பத்தை காக்கும்
குலமகள் வாழ்வில் கொள்கையை சேர்த்திடு!
மடையிலா நீரென மாபெரும் அன்பால்
மகிழ்ந்திட தாயது மனதில் நிலைத்திடு!
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
கண்கண்ட அன்னை கருத்தினில் தெய்வம்!
திருக்கோவில் தேடி தெய்வத்தை தொழுமுன்
திருப்பாதம் வணங்கி தொழுதிட செய்வோம்!
குருவின் முதலாய் கொடியவன் வரையில்
கொடுப்பவள் உயிரை கும்பிட்டு உய்வோம்!
பெருமை வாழ்வினை பெற்றிட வைத்த
பெற்றவள் மனதை பாசத்தில் நெய்வோம்!
மயக்கிட மணக்கும் மழலையின் மொழியை
மெல்ல புரிந்தே மலர்ந்திடும் தாய்மை!
வியந்திட வைக்கும் விடலைக்குப் பாட்டு
விருந்தென இனிக்க வந்திடும் புலமை!
தியாகத்தின் வடிவென திளைக்கும் தாயால்
தினமும் மிளிர்ந்திடும் தெய்வத் தூய்மை!
வயதினை கடந்தும் வணங்கிட அன்னை
வாழ்நாள் சிறப்பென வைத்திடு கடமை!

கருத்துகள்