படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! மே-15. உலக குடும்ப தினம்.! -ப.கண்ணன்சேகர், திமிரி.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !



மே-15.  உலக குடும்ப தினம்.!

 -ப.கண்ணன்சேகர், திமிரி.
                                 பேச : 9894976159.

'Kavisooriyan' Haikoo idhazh,
13,Varada reddi street,
Thimiri-632512.
Vellore dist., Tamil nadu, INDIA.
cell:9698890108.
.

உறவினை போற்றிடு  உணர்வினை பகிர்ந்திடு
      உண்மையை பேசிடு  ஒற்றுமை கொண்டிடு
அறத்தினை வளர்த்திடு அன்பினை பகிர்ந்திடு
      ஆதரவு தந்திடு  ஆனந்தம் கண்டிடு
பறவையை பார்த்திடு  பாசத்தைக் கற்றிடு
      பகிர்ந்திட வாழ்ந்திடு  பட்டொளி வீசிடு
பிறவியின் பயனெடு  பிரிவினை மறந்திடு
      பிளவினை தடுத்திடு பெருமையை காத்திடு

மக்களை சேர்த்திடு  மகிழ்வென வாழ்ந்திடு
      மலரென பூத்திடு  மணமென வீசிடு
சிக்கலை தீர்த்திடு  சிரித்திட பழகிடு
      செல்வத்தை சேர்த்திடு  சிறப்பென வாழ்ந்திடு
அக்கரைக் காட்டிடு  அவனியில் கூடிடு
      ஆன்றோரைத் தொழுதிடு அகலென ஒளிர்ந்திடு
ஊக்கத்தைக் கொண்டிடு  ஒற்றுமை காத்திடு
      உற்றோரை சேர்ந்திடு  உரிமையைக் கொண்டிடு

கொடுத்திட பழகிடு  கூடியே உண்டிடு
       கொள்கையை வகுத்திடு கொடையினை நல்கிடு
உடுக்கையின் உணர்வொடு  இடுக்கனை களைந்திடு
       உண்மையின் அன்போடு உறவினை இணைத்திடு
துடுப்பது அலையோடு துயரத்தை கடந்திடு
       துடிக்கின்ற அன்போடு தொய்வின்றி தொடர்ந்திடு
குடும்பத்தைக் காத்திடு  குழப்பத்தை தவிர்த்திடு
       குடியினை ஒழித்திடு  குலத்தினை போற்றிடு

                              

கருத்துகள்