நன்றி பாக்யா வார இதழ் !
அறம் செய்ய விரும்பு என்றால்
அவ்வை நாம் மரம் நடுவதும்
அறமே !
அம்மா அடிக்கமாட்டாள்
வேண்டாம் அச்சம்
செடியை நடு !
ஆடு மேய்ந்துவிடுமோ ? என
அஞ்சாதே விதைத்திடு
வேலி கட்டலாம் !
மரம் நடுவோம் ! அளவோடு
மழை பெறுவோம் !
மானுடம் காப்போம் !
வெப்பமயமாதலைத் தடுக்க
விவேகமான வழி
மரம் வளர்த்தல் !
வேண்டாம் சந்தேகம்
வளருமா ? என்று
வளர்ப்போம் நீர் விட்டு !
வருங்காலத் தலைமுறையும்
வளமாக வாழ்ந்திட
வளர்ப்போம் மரம் !
கருத்துகள்
கருத்துரையிடுக