தேர்தல் ! கவிஞர் இரா .இரவி !

தேர்தல் ! கவிஞர் இரா .இரவி !


மூட நம்பிக்கைகளில் 
ஒன்றானது 
தேர்தல் அறிக்கை !

பார்த்து எழுதுவதில் மாணவர்களை விஞ்சினர்
அரசியல்வாதிகள் 
தேர்தல் அறிக்கை !

வென்றதும் வென்றவர் 
முதலில் மறப்பது 
தேர்தல் அறிக்கை !

வில்லாய் வளைப்போம் வானத்தை 
கயிறாகத் திரிப்போம் மணலை
தேர்தல் அறிக்கை !

நிருபித்தனர் 
வாய்ச்சொல் வீரர்கள் என்பதை 
தேர்தல் அறிக்கை !

தேன் வந்து பாயுது   காதினிலே 
தேர்தல் அறிக்கை படிக்கையிலே 
நடந்தால் நல்லது உண்மையிலே !

சட்டம் இயற்றுங்கள் 
தேர்தல் அறிக்கை நிறைவேற்றாவிடில் 
தண்டனை உறுதி  என்று !


கோடையின் கொடுமையை விஞ்சியது
அரசியல்வாதிகளின்  கொடுமை
தேர்தல் பிரச்சாரம் !

எல்லோரும் சொல்கின்றனர்
மதுவிலக்கு
எப்படி வந்தன மதுக்கடைகள் ?

விலகவில்லை
எந்த ஆட்சியிலும்
வறுமை இருட்டு !

அழிப்போம் என்று சொல்லி
நிரந்தமாக்கினர்
வறுமைக்கோடு !

சின்ன மீன்  போட்டு
பெரிய மீன் பிடிப்பு
அரசியல் !

செய்யாதே செலவு ! தேர்தல் ஆணையம்
எவ்வளவு செய்வாய் செலவு ? கட்சி
குழப்பத்தில் வேட்பாளர் !

யாரைத்தான் நம்புவது
குழப்பத்தில் தவிப்பு
வாக்காளர் !

முகத்தில் கரி பூசி
ஏமாற்றுவதற்கு முன்னோட்டம்
விரலில் மை  !

குடவோலைத் தேர்தலில்
குற்றவாளிகள்  நிற்க முடியாதாம்  
நடைமுறைப்படுத்துவோம் !

சரியாகவே சொன்னார்
சிந்தனைச்சிற்பி பெரியார்
அரசியல் பற்றி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்