நன்றி . முதல் கவிதையாக பிரசுரம் செய்த தினமணி இணையம் !

நன்றி . முதல் கவிதையாக பிரசுரம் செய்த தினமணி இணையம் !


வள்ளுவம் வாழ்வதெங்கே ? கவிஞர் இரா .இரவி ! 

மழை வெள்ளத்தில் சென்னையில் வாடியோரை 
மனிதநேயத்தோடு காத்தவர்களிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

ஆதரவற்றோர் இல்லம் நடத்தி 
அன்பு காட்டும் உள்ளங்களில் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

நன்றி மறக்காது பெற்றோர்களிடம் 
நன்றி காட்டும் இதயங்களில் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

நேர்மையான அதிகாரிகளின் 
நெஞ்சுரத்தில் வாழ்கிறது 
வாழ்கிறது வள்ளுவம் ! 

சாதி மதம் கடந்து எல்லோரிடமும் 
சகோதரத்துவம் பேணுவோரிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

தவறவிட்ட பணத்தின் மீது ஆசையின்றி 
அப்படியே திருப்பித்தரும் ஓட்டுனரிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

ஊழல் செய்து கொள்ளை அடித்ததற்காக 
தண்டனை அனுபவிக்கும் போது 
வாழ்கிறது வள்ளுவம் ! 

அசைவம் வேண்டாம் சைவம் போதும் 
மருத்துவர் வாக்கில் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

மதுககடையை மூடச் சொல்லும் 
சமூக சேவகர்களிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

செயற்கை உரம் வேண்டாம் எனும் 
சமூக ஆர்வலர்களிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

மரத்தை வெட்டாதீர் 
மன்றாடும் மனிதர்களிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

உண்மையில் மரம் நடும் 
உணர்வாளர்களிடம் 
வாழ்கிறது வள்ளுவம் ! 

வள்ளுவம் பரப்பிடும் தமிழ் 
அறிஞர்கள் உள்ளங்களில் 
வாழ்கிறது வள்ளுவம் !


-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்