நன்றி பாக்யா கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் !
அரசியல்வாதிகளின்
இருக்கை ஆசை
உனக்கும் வந்ததோ ?
வாழ்வின் இன்பம்
பெற்றோருக்கு உணர்த்திய
பாலகனே வாழ்க !
உட்கார்ந்தே இருந்தால்
சிலந்தியும் சிறை வைக்கும்
எழுந்து நட !
ஓடி விளையாடு பாப்பா
உனக்காகத்தான் பாடினான்
உன்னத பாரதி !
இருக்கையில் அமர்ந்திருக்கும்
இனிய சந்திரனே
நீ இருக்கையில் இல்லை கவலை !
என்ன பார்வை உந்தன் பார்வை
புன்னகை புரி
வேண்டாம் சோகம் !
இறக்கிவிட யாருமில்லையோ ?
இறங்கு நீயே
காயமின்றி வாழவில்லை !
முயன்று பார்
முடியும் உன்னால்
இறங்கி நட !
சும்மா இருப்பது
சுகம்தான்
சுகவீனம் வரவழைக்கும் !
சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் இளவரசே
நாளை நீயே பேரரசு !
கருத்துகள்
கருத்துரையிடுக