படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!! ( கவிஞர் வித்யாசாகர்) .

படித்ததில் பிடித்தது !   கவிஞர் இரா .இரவி
நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!! ( கவிஞர்  வித்யாசாகர்)

.
நாக்குருசிக்கு காசுபோட்டு
பாதிஉயிரைப் பிச்சித் தின்ன
பரோட்டா வாங்கிக்கோ;
பரோட்டா வாங்கிக்கோ;

வீட்டுச்சோத்தை ஒழிச்சிக்கட்டும்
ஹோட்டல் வெசத்தை நாளுக்குநாள்
பரோட்டாவில் கூட்டிக்கோ;
பரோட்டாவில் கூட்டிக்கோ;

மைதாப் பண்டம் மாயல
தின்ன ருசி ஓயல
சக்கரை கொழுப்பும் ஏறிப்போச்சு
புதுசா பல நோய்களாச்சு;

பத்துவயசும் பத்திக்குது
பழைய கிழமும் பிச்சுக்குது,
பரோட்டாவைப் பார்த்துட்டா
உசிரு - நாக்குலையே சொட்டிக்குது;

நாடுமுழுக்க ஓடுறான்
நாலுகாசுச் சேர்க்குறான்
நாக்குதட்டி நாக்குதட்டி -
சால்னாவில குளிக்கிறான்;

குழந்தைகளை கெடுக்குற
பீசாவுல ஒழிக்குற
காசுகொஞ்சம் குறைஞ்சிட்டா
பரோட்டாவுல சிக்குற;

பாவம் மனிதா பிழைச்சிக்கோ
பரோட்டாவை ஒழிச்சிக்கோ
இட்டிலி தோசை இரண்டிருக்கு
அதுல உன்னை வளர்த்துக்கோ;

மைதாவை மறுக்ககணும்
நீண்ட காலம் வாழனும்
நோய் பாதி நீங்கணும்னா - நம்மச்
சோத்தைத் தான் நீ திங்கணும்!!

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்