படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

என்ன சாதி என்ன மதம் 
எதுவும் தெரியாது 
நானும் நீயும் நண்பர்கள் !

கள்ளம் கபடம் அறியாத 
குழந்தைகள் மலரும் நினைவுகளை
மலர்வித்தனர் !

காலில் காலணி இல்லை 
வறுமை வாட்டியபோதும் 
பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு !

வறுமையிலும் செம்மை 
வனப்பான புன்னகை 
இருவரிடமும் !

திரும்பி வராது 
குதூகலமான 
குழந்தைப் பருவம் !

ஓடி விளையாடு பாப்பா 
பாரதி வரிகளுக்கு 
செயல் வடிவம் !

எங்களுக்கு சிரிப்பா வருது 
அரசியல்வாதிகளை 
நினைத்தால் !

வருங்கால கலாமும் 
வருங்கால கல்பனா சாவுலாவும் 
வருகின்றனர் அரசுப்பள்ளிக்கு ! 

கவலையா
அப்படினா   என்ன ?
கேட்கும் குழந்தைகள் !

இணைந்த கரங்கள் 
அடையும் சிகரங்கள் 
சாதிக்கும் தங்கங்கள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்