"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !


"ஹைக்கூ முதற்றே உலகு"

நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி !

நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  
பக்கங்கள் : 154, 
விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.

"ஹைக்கூ முதற்றே உலகு" - கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ கவிதை நூல் தொகுப்பு..."முதற்றே உலகு" தலைப்பு மட்டும் அல்ல... நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் திருக்குறளுக்கு, நிகரானவைகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.... நூலின் பெரும் பகுதியில் ஹைக்கூ வடிவமே நிறைந்திருக்கிறது..முப்பது பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்திகளை மிக தெளிவாக மூன்று அடிகளுக்குள் சொல்லியிருப்பது.....வியப்பை தருகிறது....படிக்கையில், வாசகர் மனதிலும் நிலைத்து நின்று சிந்திக்கத் தூண்டுகிறது...கூடுதலாக துளிப்பா, லிமரைக்கூ, லிமர்புன், பழமொன்ரியு போன்ற பல வடிவங்களிலும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள்......பல்சுவைகளிலும் தனது எழுத்தாளுமை திறனை நிரூபித்திருக்கிறார்கள்.....சிகரத்தின் சிகரம் கலாம் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, நூலின் தொடக்கமே ('கலாம் 40')மிக அருமையாய், 40 ஹைக்கூகள் அமைந்துள்ளது...அடுத்தடுத்து பல்வேறு கோணங்களில் நூல் பயணித்தாலும், இறுதியில் கவிஞரின் நாட்டுப்பற்றும், சமூக அக்கறையுமே வெளிபட்டு, மேலோங்கி நிற்கிறது...

"அவர் மூச்சு மட்டுமே நின்றது
அவர் பற்றிய பேச்சு நிற்காது
கலாம்"

-கலாம் அவர்கள், தனது கடைசி நொடி வரை நாட்டிற்காகவே வாழ்ந்தவர்கள்...மாணவர்களிடம் அறிவை விதைத்தவர்கள்...எளிமையான மனிதர்....பெக்ரானஅணு சோதனைகள் மூலம் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கென்று தனி இடத்தை பெற்று தந்தவர்கள்....இறந்தாலும்...அவரது புகழ் நின்று நிலைத்து வாழும்...என்பதை தான் கவிஞர் அழகாய் மூன்று அடிகளுக்குள் சொல்லியிருக்கிறார்கள்...

கைகளின்றியும் வாழலாம்
கால்களின்றியும் வாழலாம்
வாழ இயலாது தன்னம்பிக்கையின்றி!

- தன்னம்பிக்கையூட்டும் அருமையான வரிகள்...நேர்மறை எண்ணங்களை விதைத்து சென்றிருக்கிறார்கள்....

பானையில் கற்கள் போடவில்லை உறிஞ்சியது குழல் வைத்து
கணினி யுகத்தின் காகம்!

-மாறி வரும் நவீன உலகத்திற்கு ஏற்ப, கவிஞர் காக்கையையும் நவீன படுத்தியிருப்பது வியக்கத்தக்கது....

காயமில்லை வானிலிருந்து
விழுந்தும்
மழை!

- நேர்த்தியான சிந்தனை...முதல் இரண்டு அடிகளை படிக்கும் போதே....இறுதி வாக்கியம் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது ...அருமை...

இயற்கையின்
கஞ்சத்தனம் 
வறட்சி....

-வறட்சிக்கே புது இலக்கணம் வகுத்திருக்கிறார்கள்....வெகு சிறப்பான சிந்தனை பாராட்டத்தக்கது....

முடிவாகிறது
நிதியால்
சில நீதி....

-கையூட்டுக்கு எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார்கள்... 

வெகு நாட்களாகி விட்டன
நேர்மை விடைபெற்று
அரசியல்!

-அரசியல் பற்றிய, தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்....

வயது அறுபது
கல்லூரி மாணவர்
கதாநாயகன்!

-சமகால நிகழ்வுகளை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்...

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு
பேசத் தெரிந்த பிள்ளை பிழைக்கும்!

-எதார்த்தம்...காலத்திற்கு ஏற்றார் போல, பழமொழிகளை மாற்றியிருக்கிறார்கள்....அருமை...

தூரப்போனது
தூய்மை
அரசியல்...

-தற்கால அரசியலுக்கு எதிராய் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்....

பூங்கொத்து, கலங்கரை விளக்கம், விழிகள், பகுத்தறிவு, கண்ணீர் போன்ற பல வித்தியாசமான பாடுப்பொருள்களை ஹைக்கூவோடு இணைத்திருப்பது வெகு சிறப்பு....

அனைவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்....

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

கருத்துரையிடுக