படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
--
.
பிறப்பு !
வி. ஆர் கணேஷ் சந்தர் !
பிறப்பு ரொம்ப மோசம் ஆமா. அதைப் பத்தி ரொம்பப் பேர் சொல்லியிருக்காங்க பிறப்பு சும்மா சும்மா வருது ஆமா. அதைத் தடுக்க யாராலே முடியும்? பிறப்பு எப்ப வரும்? எப்பப் போகும்? னே தெரியல்லே உங்களுக்கு மட்டுமில்லே யாருக்கும் தெரியாது பிறப்பு அடுத்தத் தடவை வராம ஜாக்கிரதையா இருக்கணும். நாம அப்படி நெனைக்கிறோம். ஆனா அது நம்ம கையிலேயா இருக்குது? பிறப்புகிட்டே இருந்து தப்பிக்கிறது எப்படி? இது பெரிய கேள்வி. ஞானிங்கதான் பதில் சொல்லணும் பிறப்பு கொடுக்கிற கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லே எல்லாரும் கடைசியா கண்டுபிடிக்கிறது அதைத்தானே? பிறப்பு தனியா வந்தா பரவாயில்லியே? அதெப்படி தனியா வரும்?. தன்னோடதையெல்லாம் சுமந்துகிட்டேதானே வரும்? பிறப்பு வராம தடுக்க ஒரு யோசனை சொல்லுங்க.
ஒரு பூச்செடி வீட்டுலே வெச்சு தண்ணி ஊத்திக்கிட்டு வாங்க.
சம்பாஷணை முடிந்தது. நான் மறுநாள் என் அப்பாவிடம் சொன்னேன்., ‘எதிர் அபார்ட்மெண்ட் கீழ் தளத்திலே ஒரு மாசம் முன்னாடி குடி வந்திருக்கிற பெரியவர் பிறப்பு பற்றி தத்துவார்த்தமா நெறைய பேசினாரு.
அப்பா சொன்னார். அது பிறப்பு பற்றி இல்லே. அவரோட தம்பி பிரபு பத்தி பேசியிருப்பாரு. அவர் இங்கே வந்த ஒரு மாசத்திலே அவரோட தம்பி குடும்ப சகிதமா நாலு தடவை வந்து ஒவ்வொரு தடவையும் இரண்டு இரண்டு நாள் தங்கிட்டு போயிருக்காரு. அவரை இந்தப் பெரியவர் பிரபுன்னு சொல்லாம பிறப்புன்னுதான் சொல்லுவார். சொல்லிக்கொண்டிருந்தபோதே அந்தப் பெரியவர் அருகில் எங்களை நோக்கி வந்தார்.
தம்பி, நீங்க சொன்னமாதிரியே ஒரு பூச்செடி வெச்சிட்டேன். அதிலே செகப்புக் கலர்லே பூ இருக்கிறதைப் பார்த்துட்டு என் தம்பி எனக்கு சிகப்புன்னா பயம், இனிமே இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டான். உன் யோசனை நல்லவே வேலை செஞ்சிடுச்சி தம்பி என்று சொல்லிவிட்டுப் போனார்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக