தினமணி இணையம் தந்த தலைப்பு ! வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !




வானமே எல்லை !                 கவிஞர் இரா .இரவி !

எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும் 
இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !

இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும் 
இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !

தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக ! 
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக 
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !

ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால் 
அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !

எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால் 
இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !

வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால்
வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !

காந்தியடிகள் நடக்காது  என்று நினைத்திருந்தால் 
கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !

தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால் 
தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது !
.
அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால் 
அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !

மாமனிதர் அப்துல் கலாம்  சோர்ந்து இருந்தால் 
மாணவர்களிடையே  தன்னம்பிக்கை விதைத்திருக்க  முடியாது !

தயக்கம் முன்னேற்றத்தின்  தடைக்கற்கள் அறிந்திடுக 
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதற்படி தெரிந்திடுக !

வானமே எல்லையாகக் கொள் காரணம் 
வானத்திற்கு  எல்லையே இல்லை  புரிந்திடுக !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்