.
படத்திற்கேற்ற கவிதை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
படத்திற்கேற்ற கவிதை ! கவிஞர் இரா .இரவி !
தாயை இழந்த குழந்தை
தவிக்குது தாய்ப்பாலுக்கு
ஏக்கத்தோடு பார்க்குது
ஆட்டுக்குட்டி பால் குடிப்பதை !
---------------------------------------
ஆட்டுக்குட்டி விலகியதும்
தான் அருந்தலாம்
காத்திருக்கும் குழந்தை !
---------------------------------------------
ஆடே உனக்குக் கூட அம்மா உள்ளது
ஆனால் எனக்குதான் இல்லை அம்மா !
-------------------------------------
கொடிது வறுமை
உண்ணாத காரணத்தால்
அம்மாவிடம் இல்லை பால் !
ஆட்டுக்குட்டியே குடித்து விட்டு விலகு !
நானும் பாசியாறி விடுகிறேன் !
---------------------------------------------
ஆட்டுக்குட்டி பால் அருந்தும் அழகை
அழகாய் அமர்ந்து ரசிக்குது
அழகிய குழந்தை !
-------------------------------------
வறுமையிலும் பசியிலும்
செம்மையான குழந்தை !
ஆட்டுக்குட்டிக்கு முன்னுரிமை
தந்து காத்திருக்கிறது !
------------------------------------------
ஆடே உன் குட்டிக்கு
தந்தது போதும் !
அந்த குட்டிக் குழந்தைக்கும்
கொஞ்சம் கொடுக்கலாமே !
----------------------------------------
பால் அருந்தும் அழகை
பாலகன் ரசிக்கிறான் !
-----------------
பால் அருந்தும் பயற்சியை
ஆட்டுக்குட்டியிடம் கற்கின்றானோ ?
-----------------------------------
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்
கருத்துரையிடுக