தினமணி இணையம் தந்த தலைப்பு ! வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !

வாக்கு உன் செல்வாக்கு உண்மை 
வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை !

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி  நாடு 
உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு   !

மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு 
மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு !

விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ?
வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ?

சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும் 
சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் !

வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு 
வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் !

தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை 
தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் !

ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர் 
ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் !

ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி 
எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை ! 

காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று 
கணினி காலத்தில் ஊழல் செய்கின்றனர் இன்று !

அரசியலில் நேர்மை வாய்மை இருந்தன அன்று 
அரசியலில் நேர்மை வாய்மை இல்லை  இன்று !


சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை அன்று 
சாதியைப் பார்த்து வாக்களிக்கின்றனர் இன்று !

நல்லவர்கள் நின்றனர் தேர்தலில் அன்று 
நல்லவர்களைத் தேட வேண்டியுள்ளது இன்று !

பொதுநல விரும்பிகள் இருந்தனர்  அன்று 
தன்னல விரும்பிகள் பெருகினர் இன்று !

மக்கள் தொண்டை விரும்பினர் அன்று 
தன் மக்கள் தொண்டை விரும்புகின்றனர்  இன்று !

கொள்கைக்காக வைத்தனர் கூட்டணி அன்று   
கோடிகளுக்காக வைத்தனர் கூட்டணி இன்று !

அதிகபட்ச நல்லவர்கள் இருந்தனர் அன்று 
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு இன்று !

பணம் வாங்கி வாகளிக்கவில்லை அன்று 
பணம் வாங்கி வாகளிக்கின்றனர் இன்று !

வாக்கு உன் செல்வாக்கு அதனை நீ 
வாய்மையாக பணம் பெறாது பயன்படுத்து !


-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்