துணையாய் தொடரும் நிழல்கள்அவள் நினைவுகள் !
தோழியாய் இருந்து காதலியாக மாறினாள் !
கடவுள் உண்டு என்று அவள் வாதிட
கடவுள் இல்லை என்று நான் வாதிட !
வாதத்தில் தொடங்கி வசந்தத்தில் முடிந்தது
வஞ்சி அவள் என்னைக் காதலித்தாள் !
எனக்கு என்ன பிடிக்கும் அவள் கேள்வி
உனக்கு என்ன பிடிக்கும் என் கேள்வி !
எனக்குப் பிடித்தவை அவளுக்கும் பிடித்தன
அவளுக்குப் பிடித்தவை எனக்கும் பிடித்தன !
ஒரே நேர்கோட்டில் இருவரும் பயணித்தோம்
ஒரே வாழ்வு இருவர் வாழ முடிவெடுத்தோம் !
வழக்கம் போல வந்தது காதலுக்குத் துன்பம்
வஞ்சியைப் பிரித்தார்கள் என்னிடமிருந்து !
எல்லாக் காதலும் எல்லோராலும் ஏற்கப்படுவதில்லை
ஏதோ ஓரிரு காதலே திருமணத்தில் முடிகின்றன !
காதல் தோல்வி என்னுள் கவிதை வளர்த்தது
காதலி நினைவாக கவிதைகள் பெருகியது
.மூளையின் ஒரு ஓரத்தில் நிரந்தர இடம்
மங்கை அவள் பிடித்திருப்பது உண்மை !
பேச்சு வாரத்தை எங்களுக்குள் இல்லாவிடினும்
பசுமையான நினைவுகள் மட்டும் மறக்கவில்லை !
பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள்
பசுவினைப் போல அவ்வப்போது அசைபோடுகின்றேன் !
உண்மையான காதலுக்கு அழிவில்லை உண்மை
உள்ளத்துள் உயர்ந்த இடம் என்றும் உண்டு !
என் கவிதைகளின் முதல் ரசிகை அவள்
என்னுள் கவிதை விதை விதைத்த விவசாயி !
இருவரும் பிரிந்து பல்லாண்டுகள் ஆனபோதும்
எங்களுக்குள் தொடரும் நிழலாய் நினைவுகள் !
கருத்துகள்
கருத்துரையிடுக