கூழாங்கற்கள் ! நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கூழாங்கற்கள் !

நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! 

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீ ராம் வளாகம், காந்தி நகர், முக்கியச்சாலை, வத்தலக்குண்டு – 642 202. விலை : ரூ. 200.
*****
      ‘கூழாங்கற்கள் என்ற நூலின் பெயரே பிடித்தமாக இருந்தது. நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தந்தது.  21 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.

      முகம்மது யூசுப் என்னும் பெயரில் இருவர் எழுத்துலகில் இருக்கின்ற காரணத்தால் கனவுப்பிரியன் என்று புனைப்பெயர் சூடி எழுதி உள்ளார்.

      மாபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தொடங்கி, இரா. நாறும்பூநாதன், இரா. அர்சியா, சுதாகர் கசுதூரி, கே.எஸ். இராதாகிருஷ்ணன், ஆர், ஷாஜஹான் வரை பலரும் அணிந்துரை, வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.  நூலின் அட்டைப்படத்தை அழகாக வடிவமைத்து மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்பாளர் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

      மதிப்புரைக்காக இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய முகநூல் நண்பர் அய்யா ரத்தினவேல் அவர்களுக்கு நன்றி.  நூல் ஆசிரியர் என்னுரையில் அவரது அப்பா எழுதிய நாட்குறிப்பை படித்து மனம் வருந்திய நிகழ்வைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரவர் அப்பா நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.
      புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும், இலக்கியத்திற்காக நேரம் ஒதுக்கி, கதை, கவிதை, கட்டுரை எழுதி வரும் கனவுப் பிரியன் போன்றவர்களால் தான் தமிழ் வாழ்கிறது என்றால் மிகையன்று.

      நான் கவிதை நூல் படிக்கும் அளவிற்கு சிறுகதை நூல் விரும்பி படிப்பதில்லை.  இந்த நூல் படித்து முடித்ததும், சிறுகதைகள் மீதும் விருப்பம் வந்தது.

      “இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் என்ற முதல் சிறுகதையே முத்தாய்ப்பாக உள்ளது.  முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது.  செங்கராஜ் வீட்டிற்கு பாம்பு பிடிக்க வந்த ஐயப்பன் பிடித்து விட, பண்ணையில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.  ஐயப்பன் சிலம்பம், சுருள், தீப்பந்தம் முதலான வீர தீர விளையாட்டுகள் மட்டுமன்றி வர்மம் உள்ளிட்ட மருத்துவமும் அறிந்த சகலகலா வல்லவர்.  இவரை குருவாக ஏற்று ஐயப்பனோடு சேர்ந்து வர்ம்ம், மருத்துவம் என்று உடன் தன் மகன் செல்வது கண்டு கோபமடைந்த செங்கராஜ், ஐயப்பனை வேலையை விட்டு நிறுத்தி வெளியே அனுப்பி விடுகிறார்.

      பதச் சோறாக இந்த முதல் கதை சொல்லும் கருத்துக்கள் பல.  வீட்டில் கொத்த வந்த பாம்பைக் கொன்று குடும்பத்தைக் காப்பாற்றியவர் என்ற நன்றி கூட இல்லாமல், மகனுக்காக ஐயப்பனை வேலையை விட்டு விரட்டும் நிகழு முதலாளி வர்க்கம் தன்னலம் மிக்கது, நன்றி மறக்கக் கூடியது என்பதை உணர்த்துகின்றார்.  MBA என்ற கல்வி அறிவை விட ஐயப்பன் என்ற படிக்காத மனிதரிடம் கற்கும் அனுபவ அறிவு சிறந்தது என்பதை உணர்த்துகின்றார். 

 இன்றைய இளைய தலைமுறையினர் அப்பாவின் தொழில் வாரிசாக இருந்து தொழில் செய்வதை விட தன் திறமைக்கு ஏற்றபடி தாமாக தொழில் செய்யவே பெரிதும் விரும்புகின்றனர் என்பதை நன்கு பதிவு செய்துள்ளார்.  இறுதியாக திறமை இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் எனப்தை வலியுறுத்தி உள்ளார்.  ஒரே ஒரு சிறுகதை படிக்கும் வாசகர் மனதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு சிறுகதையும் எழுதி உள்ளார்.  நூல் ஆசிரியர் எழுத்தாளர் கனவுப் பிரியன்.  பாராட்டுக்கள்.

      தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை.  படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருப்பது சிறப்பு.

      இரண்டாவது சிறுகதை நூலின் பெயரில் உள்ள “கூழாங்கற்கள் சிறுகதை என்றாலும் படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன.  பாராட்டுகள்.

      பல்வேறு தகவல்களை மிக லாவகமாக எழுதி உள்ளார்.  நெருங்கிய உறவுக்குக் திருமணம் புரிவது தவறு.  அவ்வாறு புரிந்த்தால் மகளுக்கு திக்குவாய் ஏற்பட்ட்து.  அவளுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி வெளிநாட்டு தீவிற்கு வேலைக்கு செல்கிறார் அப்பா பாலா.  குடும்பங்களைப் பிரிந்து குடும்ப நலனுக்காக வருமானத்திற்காக வெளிநாடுகள் சென்று தனிமையில் வாடும் வாட்ட்த்தை, ஏக்கத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.  

வெளிநாடு சென்ற அனுபவம் இருப்பதால் தனது அனுபவங்களையும் கலந்து சிறுகதை எழுதி இருப்பதால் உண்மை இருப்பதால் கதையில் ஈர்ப்பு வந்து விடுகிறது.  மனைவி சொன்னால் என்பதற்காக தனது மகள் திக்குவாய நீங்கிட தன் வேலை பார்க்கும் தீவில் உள்ள நல்ல கூழாங்கற்களாக சேகரித்தி வைக்கின்றான.

      சிற்கதையில் உள்ள சில வரிகளை இங்கு எழுதுகின்றேன்.  குடும்பத்தைப் பிரிந்து வாழும் அப்பாக்கள் மன்நிலையை அப்படியே எழுதி உள்ளார், பாருங்கள்.

      “ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத வரை தான், வெளிநாடு இனிக்கும், தோன்றி விட்டால் ஒவ்வொரு நிமிடமும் வேதனை தான்.  பின் எப்படி முழு மனதுடன் வேலை செய்ய.

      குடும்ப நினைவு வந்து விடுப்பு எடுத்து சொந்த நாடு செல்ல முயன்ற போது, பாலா விமான நிலையத்தில் சந்தித்த அனுபவங்களை பல்வேறு திருப்பங்களுடன் பதிவு செய்துள்ளார்.  ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன.  ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை வரவழைத்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் எழுத்தாளர் கனவுப்பிரியன்.

      மகளுக்காக சேகரித்து வைத்த கூழாங்கற்களை சோதனையிட்டவர்கள் இது வெறும் கல் அல்ல ; பவளம். இதனைக் கண்டுபிடிக்க உதவியதற்காக உங்களுக்கு அரசாங்க வேலை தருகிறோம்.  எல்லா வசதிகளும் செய்து தருகிறோம்.  மகள் மருத்துவத்திற்காக விடுப்பு எடுத்து இருந்தீர்கள்.  உங்கள் மகள் மருத்துவத்தை இங்கேயே பார்க்கலாம் அல்லது நீங்கள் விரும்பும் இட்த்தில் பார்க்கலாம்.  எல்லா செலவும் அரசாங்கம் ஏற்கும் என்று சொல்ல, இதனைக் கோட்டு கதாநாயகன் பாலா மட்டும் மகிழவில்லை.  நூல் படிக்கும் வாசகர் அனைவரும் மகிழ்கின்றோம்.  நூல் ஆசிரியர் எழுத்தாளர் கனவுப்பிரியனுக்கு பாராட்டுகள்.  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

-- 

.


நன்றி
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

  1. கூழாங்கற்கள் ! நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! = அருமையான விமர்சனம். எனது பெயரையும் திரு கனவுப் பிரியன் அவர்கள் பெயரையும் tag செய்திருக்கலாமே. இப்போது தான் பார்க்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கவிஞர் இரா .இரவி - RRavi Ravi

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக