சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்
முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் !
பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !
பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும்
வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !
வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும் !
பெண்சிசுக் கொலை இல்லாது ஒழியட்டும் !
பெண் குழந்தைகளைப் பேணிடும் நிலை வரட்டும் !
வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியட்டும் !
வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டட்டும் !
சாதி சமயச் சண்டைகள் இல்லாது ஒழியட்டும் !
சகோதர எண்ணம் எல்லோருக்கும் வரட்டும் !
வன்முறை நாட்டில் எங்குமின்றி ஒழியட்டும் !
வசந்தம் வாழ்வில் அனைவருக்கும் வசப்படட்டும் !
அநீதிகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
அறவழியில் சமுதாயம் எந்நாளும் நடக்கட்டும் !
மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியட்டும் !
மூளையைப் பகுத்தறிவிற்கு பயன்படுத்தட்டும் !
செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும் !
இயற்கை உரங்கள் எங்கும் தூவட்டும் !
மதவெறி மண்ணோடு மண்ணாக மறையட்டும் !
மனிதநேயம் மனங்களில் மலரென மலரட்டும் !
நச்சுக் கலைகள் எங்குமின்றி அழியட்டும் !
நல்ல கலைகள் நாட்டில் எங்கும் வளரட்டும் !
இளைய சமுதாயம் மூத்தோரை மதிக்கட்டும் !
இனிவரும் சமுதாயம் சிறந்ததாகச் சிறக்கட்டும் !
உலகின் முதல் மொழி தமிழ் உலகம் உணரட்டும் !
உலகம் முழுவதும் உள்ள மொழி தமிழ் அறியட்டும் !
ஏற்றத் தாழ்வுகள் இல்லாது ஒழியட்டும் !
எங்கும் எதிலும் சமநிலை என்றாகட்டும் !
ஆணவ எண்ணம் அடியோடு அழியட்டும் !
அமைதி பூங்காவாக அகிலம் திகழட்டும் !
தீய எண்ணங்கள் மனதிலிருந்து ஒழியட்டும் !
நல்ல எண்ணங்கள் மனதினில் நிலைக்கட்டும் !
மரங்களை வளர்ப்பது மக்களின் கடமையாகட்டும் !
ஏரி குளம் கண்மாய் எங்கும் தூர் வாரட்டும் !
எல்லா மழைநீரையும் அவை சேமிக்கட்டும் !
நீதி எங்கும் எதிலும் நிலைபெறட்டும் !
நிதிக்கு மயங்கும் நிலை மாறட்டும் !
வாக்கில் மெய் என்றும் நிலைக்கட்டும் !
வள்ளுவர் வாக்கென வாழ்வாங்கு வாழட்டும் !
பஞ்சம் பட்டினி இல்லாது ஒழியட்டும் !
பாவம் ஏழைகள் யாருமில்லை நிலை வரட்டும் !
கொலை கொள்ளை எங்கும் இல்லாது ஒழியட்டும் !
கொள்கை குறிக்கோளோடு மக்கள் வாழட்டும் !
இலஞ்சம் ஊழல் எங்கும் இல்லாது ஒழியட்டும் !
இலட்சிய நோக்குடன் மக்கள் செயல்படட்டும் !
துன்பம் கவலை வாழ்வில் தூர விலகட்டும் !
இன்பம் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும் !
துயரம் சோகம் இல்லாது ஒழியட்டும் !
தூய நல்வாழ்க்கை எல்லோருக்கும் அமையட்டும் !
கல்வியைக் காசாக்கும் கொடுமை ஒழியட்டும்
கல்வி அனைவருக்கும் இலவசம் என்றாகட்டும் !
மதுக்கடைகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
மதுப்பழக்கம் மக்களுக்கு இல்லாது ஒழியட்டும் !
.
உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு வளரட்டும் !
உடல்தானத்தால் பலர் உயிர் வாழட்டும் !
கண்தானம் என்பது இனி கட்டாயமாகட்டும் !
கண்தானம் தந்தால்தான்சுடுகாட்டில் எனுமதி என்றாகட்டும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக