நன்றி . தினமணி இணையம்

அணையட்டும் சாதீ: கவிஞர் இரா .இரவி

First Published : 28 March 2016 12:00 AM IST

விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி 
விலங்காக மனிதன் மாறுவது  பரிணாம  வீழ்ச்சி  !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் 
சங்கம் வைத்து சாதி வெறி வளர்க்கும் அவலம் !
தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கும் தலைவன் 
தூண்டில் புழுவாக இரையாகும் தொண்டன் !
சொந்த புத்தியின்றி சொல்புத்திக் கேட்கும் கொடுமை  
சோகத்தில் ஆழ்த்தி மகிழ்ந்திடும் கொடூர மடமை !
பெற்ற மகளை விட உனக்கு உன் சாதி பெரிதா ?
பெற்ற மகனை  விட உனக்கு உன் சாதி பெரிதா ?
சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும் 
சாதிமத வெறி உடன் மாண்டால்  போதும் !
எதையும் ஏன் ? எதற்கு  ? எப்படி எதனால் ? என சிந்தி 
எவனோ சொன்னதற்காக கூலிப்படையாகலாமா ?
விலை மதிப்பற்றது மனித உயிர்கள் உணர்ந்திடு 
வீண் வீம்புக்கு உயிர் பறிப்பதை நிறுத்திடு !
உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழ முடியுமா ?
ஒட்டு மொத்த சாதியின் பங்களிப்பே உன் வாழ்வு !
உன் சாதிக்கு என்று தனி ரத்தமா ஓடுது ?
உனக்கு உயிர் காக்க உதவிய உதிரம் எந்த சாதி ?
விலங்குகள் கூட அன்பு செலுத்தி வாழுதடா 
வெட்டி மனிதர்கள் தான் வெட்டி வீழ்கின்றனர் !
சாதீயை வளர விடுவது தமிழகதிற்கு அவமானம் 
சா தீயை மனிதநேயம் தண்ணீரால் அணைத்திடுவோம் 

சகோதரர்களாய் அனைவரும்  கூடி வாழ்வோம் 
சாதி எனும் தீயை அணைக்க வீரர்களாய் மாறுவோம் !
நன்றி  . தினமணி இணையம்


கருத்துகள்