தினமணி இணையம் தந்த தலைப்பு
மீனைப் பிடிக்க வைக்கும் தூண்டில் புழுவென
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
இலவசம் எனும் வசியம் ! கவிஞர் இரா .இரவி !
இலவசம் எனும் வசியம் மருந்து தந்து
இளிச்சவாயர் ஆக்கிவிட்டனர் மக்களை !
உழைப்பாளியை சோம்பேறியாக்கி வீட்டில்
உட்கார்ந்து உண்ண வழி வகுத்தனர் !
மீன் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுத்தருதல்
மேன்மையானது என்று சீனப் பொன்மொழி உண்டு !
மீன் வழங்கி இங்கே பழக்கப் படுத்தியதால்
மீன் பிடிக்கத் தெரிந்தவர்களும் மறந்து விட்டனர் !
வாழ்வாதாரம் வழங்கி விட்டால் நீங்கள்
வழங்க வேண்டியதில்லை இலவசம் !
உழைப்பும் ஊதியமும் உறுதியாகி விட்டால்
ஒருவரும் விரும்ப மாட்டார்கள் இலவசம் !
மக்களிடம் வாக்கு வாங்க வைக்கும் புழு இலவசம் !
ஆண்டவர் ஆள்பவர் போட்டிப் போட்டு இலவசங்களை
அள்ளி வழங்கி அடிமையாக்கினர் மக்களை !
ஆண்ட பரம்பரையில் வந்த தமிழக மக்களை
அடிமையாக்கி இலவசத்திற்குக் கையேந்த வைத்தனர் !
தனியாரிடமிருந்த மதுக்கடைகளை அரசுடமையாக்கி
தடுக்கி விழும் இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்தனர் !
அரசிடமிருந்த கல்வித் துறையை தனியாருக்குத் தந்து
அவர்கள் கொள்ளை அடித்தனர் அல்லல்படும் மக்கள் !
குடிமக்களை குடி மக்களாக்கி கோடிகள் திரட்டினர்
கொஞ்சம் இலவசத்திற்கு கிள்ளி வழங்கினர் !
அமைதி இழக்கச் செய்யும் மதுவும் வேண்டாம்
ஆள்வோர் தரும் பிச்சை இலவசமும் வேண்டாம் !
வசிய மருந்துக்கு மயங்கியது போதும்
வாழ்க்கையை தன் மானத்துடன் வாழ்வோம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக