தினமணி இணையம் தந்த தலைப்பு ! காத்திருப்பு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு   ! 

காத்திருப்பு     ! கவிஞர்  இரா  .இரவி !

இலவு காத்த கிளி கதையாக  
இங்கே காத்திருந்து  ஏமாந்தோர் அதிகம் !

பழம் என்று காத்திருந்து பஞ்சானது கண்டு 
பச்சைக்  கிளி வருந்தியது போலவே !

பலர் நடக்காது என்று தெரிந்திருந்தும் 
பொறுமையோடு காத்திருந்து ஏமாறுகின்றனர் !

பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணி 
பேருந்து வந்ததும் பயணிக்கிறான் !

பெண்ணிற்காகக் காத்திருந்து பலர் 
பொன்னான வாழ்கையை இழந்தனர் !

காத்திருந்த காலத்தில் செயலாற்றினால் 
கடமையில் புகழ் சேர்ந்திருக்கும் !

பொன்னை விட மேலானது நேரம் 
பொன்னை வாங்கலாம் நேரத்தை வாங்கமுடியாது !

வினாடியின் மதிப்பு விளையாட்டு வீரன் அறிவான் 
நிமிடத்தின் மதிப்பு விமானப்பயணி  அறிவான் !

அர்த்தமுள்ள அளவான காத்திருப்பு நன்று 
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பு நன்றன்று !

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பும் நஞ்சு !

பொருளற்ற காத்திருப்பு விவேகமன்று 
பொழுதை மதித்தவன் சிறப்பான் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்