ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

வருத்தத்தில் கதிரவன் 
நிலவு கண்டு மலரும் 
அல்லி !

வெளியே 
தெரிவதில்லை
வேர்களின் கடின உழைப்பு  !

உடன் இருந்தாலும் 
ஒட்ட விடுவதில்லை நீரை 
தாமரை இலை ! 

கொடியதும் உண்டு 
மரங்களில் 
கருவேல மரம் !

முக்கண் உண்டால் 
இன்பம்    
நுங்கு !

அவசியம் 
களை எடுப்பு 
விவசாயம் !

காக்கும் நீர்வளம் 
தரும் நன்மைகள் 
பனைமரம் !

கருத்துகள்