பயணம் ! கவிஞர் இரா .இரவி !

பயணம் ! கவிஞர் இரா .இரவி ! 

பிறப்பில்  தொடங்கி இறப்பு வரை 
பயணம் தொடரும் அதுவே வாழ்க்கை !

ஆதியில் பயணம் பெற்றோருடன் 
அடுத்த பயணம் வாழ்க்கைத் துணையுடன் !

பெற்ற குழந்தைகளுடன் தொடரும்
பயணம் பாடங்கள் கற்பிக்கும் !
 
உலகைப் புரிந்துக் கொள்ள முடியும் 
உணர்வுகளை அறிந்துக் கொள்ள முடியும் !

நேற்று போல இன்று இருப்பதில்லை 
இன்று போல நாளை இருப்பதில்லை !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  விதம் 
ஓடுகின்ற கடிகார முள் போல ஓடும்  !

நல்வழி நடந்தால் நிம்மதியாகும் 
தீய வழி நடந்தால் நிம்மதி போகும் !

இலக்கு உள்ள பயணம் இனிக்கும் 
இலக்கற்ற பயணம் இன்னல் தரும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்