படம் பார்த்து எழுதிய கவிதை !கவிஞர் இரா .இரவி !

படம் பார்த்து எழுதிய கவிதை !கவிஞர் இரா .இரவி !

பாவையே பார்வையால் 
ஊடுருவி உயிர் வரை செல்கிறாய் !

இருவிழிகளின் கருவிழிகள் வழி
என்னவோ செய்கின்றாய் !

தடையில்லா மின்சாரத்தை 
தந்துக் கொண்டே இருக்கின்றாய் !

இமைக்காமல் பார்க்கும் போட்டியில் 
என்னை தோற்கடித்தவள்   நீ ! 

விரல்கள் இடுக்கின் வழி 
விழி அம்பு பாய்ச்சுகின்றாய் !

உலோக அம்பு காயப்படுத்தும் 
உன் விழி அம்பு இதப்படுத்தும் !

அம்பினைப் பாய்ச்சும் வில்லென 
அழகிய உந்தன் விரல்கள் !

பார்த்தல் பசி தீரும் என்பார் 
பார்த்தல் காதல் பசி வருகின்றது ! 
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்