அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் சார்பில் எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிட்டார்கள் .தற்போது கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு நூல் விரைவில் வெளியிட உள்ளனர் .
இனிய தோழி திருமலை மன்னர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர் ,முனைவர்
ந .செ.கி . சங்கீத்ராதா அவர்கள் கவிஞர் இரா .இரவியின் 15 நூல்களை ஆய்வு செய்து, வரலாறு கேட்டு அறிந்து ,அணி வளம் , பொருள் வளம் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். கேள்விகள் கேட்டு நேர்முகம் பெற்று புகைப்படங்களுடன்
அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு நூல் வெளியிட ஆய்வேடு அனுப்பி உள்ளார் .
மனைவியின் வெற்றிக்கு கணவன் துணை நிற்க வேண்டும் .இனிய நண்பர் திரு .பாலமுருகன் அவர்கள் அவரது மனைவி முனைவர்
ந .செ.கி . சங்கீத்ராதா அவர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்றார். அவருக்கும் நன்றி .
முனைவர் ந .செ.கி . சங்கீத்ராதா அவர்கள் ஆய்வு செய்யட்டும் என்று ஆலோசனை வழங்கிய ஆசான் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்களுக்கும் .இந்த அளவிற்கு தகுதி உள்ளவனாக வளர்த்துக் கொள்ள உந்து சக்தியாக இருந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கும் ,நேர்மையான முதன்மைச் செயலர்
முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப அவர்களுக்கும் நன்றி. கவியரங்கங்களில் மேடை தந்து , கவிதை பாட வைத்து அழகு பார்த்து வரும் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கும் நன்றி .
ஒரு படைப்பாளிக்கு வாழும் காலத்திலேயே வழங்கப்படும் இதுபோன்ற அங்கீகாரங்கள்
இன்னும்தரமாகப் படைக்க உந்து சக்தியாக அமையும் .இந்த மகிழ்வான தகவலை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .
அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும் தமிழ்த்துறைத் தலைவர் கவிஞர் முனைவர் அரங்க பாரி அவர்களுக்கும் நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக