என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !

என் தேசம் ! என் சுவாசம் !   கவிஞர் இரா .இரவி !

உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது
உணவிலிருந்து உடை வரை அந்நியமானது

இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா   நாட்டுக்காரனும் ஆள்கின்றனர்  இன்று

வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று
வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர்  இன்று

விதை நெல்கள் காணமல் போனது
விதைகள் அயல்நாட்டான் முடிவானது

இயற்கை விவசாயம் அழிந்து விட்டது
செயற்கை உரங்கள் பெருகி விட்டது

பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது 
பூச்சிகள்  பல புதிது புதிதாக உருவானது

உலகமயம் என்ற பெயரில் வந்தனர்
உலை வைத்தனர் உள்ளூர் தொழில்களுக்கு

தாராளமயம் என்ற பெயரில் வந்தனர்
தாராளக் கொள்ளை அடிக்கின்றனர்

புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதுப்புது கொள்ளை அடிக்கின்றனர்

ஆயுத வியாபாரம் செய்து நம்மிடமிருந்து  
அள்ளிச் செல்கிறான் கோடிகளை சிலர்

அணு உலைகளை தலையில் கட்டி
ஆபத்தில் ஆழ்த்தி கோடிகள் பெறுகிறான்

திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்த கதையாய்
தேசத்தின் உள்ளே பன்னாட்டுக் கொள்ளையர்கள்

என் தேசம் !என் சுவாசம் ! என்று உணர்வோம்
இனியாவது விழிப்போம் கொள்ளையரை  விரட்டிடுவோம்
.
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்