நன்றி ! தினமணி இணையம் ! மனித நேயம்: வாசகர்கள் கவிதை! -கவிஞர் இரா .இரவி !

நன்றி !  தினமணி இணையம்   !



மனித நேயம்: வாசகர்கள் கவிதை!   -கவிஞர் இரா .இரவி !
 
http://www.dinamani.com/kavithaimani/2015/12/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/article3177120.ece




சாதியின் பெயரால் மோதுவது முறையோ ?
சகோதர வாழ்வைச் சிதைப்பது தகுமோ ?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சாதியில்  இல்லை !
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சிந்தையில் உண்டு !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஓரினம் !
என்று அன்றே உலகிற்கு  உரைத்தவன் தமிழன் !
ஒரே ஊருக்குள் சாதிச் சண்டை நடந்தால் !
உலகம் சிரிக்கும் நம்மைப் பார்த்து !

வெட்டுவதும் குத்துவதும் விவேகம் அன்று !
வீணாக சண்டையிடுவது பகுத்தறிவு அன்று !
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இனிக்கும் !
வீரமென்று மோதி வீழ்ந்தால் கசக்கும் !

சொந்தமாக சிந்தித்தால் சண்டை வராது !
சிலர் தூண்டி விட மோதுவது முட்டாள்தனம் !
உயர்திணை மனிதன் அக்றிணையாகலாமா !
ஒரு போதும் மனிதன் விலங்ககாகக்  கூடாது !

விலங்குகள் கூட தன் இனத்தை அழிப்பதில்லை !
மனிதன்தான் தன் இனத்தை அழிக்கின்றான் !
மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு !
மனிதன் மனிதனாக வாழ்வதே நன்று !

கருத்துகள்