கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் ! கவிஞர் இரா .இரவி !

கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !
கவிஞர் இரா .இரவி !

கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்கள் நடன ஆற்றலின் மூலம் மூன்றாம் பாலினமான திருநங்கை இனத்திற்கே பெருமை சேர்த்து வருகிறார்

நர்த்தகி நடராஜ் அவர்கள் உலகம முழுவதும் நடனம் ஆடி மதுரையின் புகழைப் பறை   சாற்றி வருபவர் .மதுரையில் அனுப்பானடியில் பிறந்தவர் .மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர் .

சுற்றுலாத் துறையின் சார்பில் நடந்த விழாக்களில் நடனம் ஆடி உள்ளார்  .பல ஆண்டுகளாகத்  தெரியும் .முகநூலில் நட்ப்பில் உள்ளார் .

அவர் ஐ.நா  மன்றத்தில் ஆடி உள்ளார் .பல நாடுகளில் ஆடி உள்ளார். கம்பன் கழகம் மதுரை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் ஆடி உள்ளார். மதுரை கம்பன் கழகத்தில் ஆடவில்லை என்ற வருத்தம் தெரிவித்தார் .

மதுரை கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் அருட் செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்கள் என்னுடைய ஹைக்கூ கவிதைகளின் ரசிகர். என்னுடைய நூல் வெளியீட்டு விழாக்களில்  கலந்து  கொண்டு பாராட்டி உள்ளார் .என்னுடைய ஹைக்கூ கவிதை இதழ்களில் படித்தால் உடன் அலைபேசியில் அழைத்துப் பாராட்டி விடுவார். அவருடைய அலைபேசி எண் என்னிடம் உள்ளது .

நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு அருட் செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களின் அலைபேசி எண் தந்து உதவினேன் .அவர் அவரிடம் பேசி முடிவாகி இன்று .மதுரை கம்பன் கழக அவ்வை விழா ,பாரதி விழாவில் அற்புத நடனம் ஆடினார் .

நர்த்தகி நடராஜ் இன்று காலை அலைபேசியில்  அழைத்து  நடனம் உள்ளது வருக என்றார் .சென்று வந்தேன் .

முதன்முறையாக  அவ்வையின் பாடல்களுக்கு நடனம் ஆடினார். பாரதியின் பாடல்களுக்கும் நடனம் ஆடினார் .தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் மனம் திறந்து பாராட்டினார் .  நர்த்தகி நடராஜ் அவர்களின்  நெடுநாள்  ஆசை  நிறைவேறியது. அவையோர் அனைவரும் கரவொலி தந்து பாராட்டினார்கள் .

நர்த்தகி நடராஜ் அவர்களின் சகோதரிகளும் குடும்பத்தினரும் வந்த நடனம் பார்த்து நெகிழ்ந்தனர் .தன் வளர்ச்சிக்கு காரணமான  உடன் இருக்கும் திருநங்கை சக்தி பாஸ்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொன்னார் .விழா இனிதே நிறைவுற்றது .அற்புத நடனம் ஆடிய கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

கருத்துகள்