படத்திற்கு ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !


பட்டப் பகலில்
நடக்குது மணல் கொள்ளை
தடுத்தால் நடக்கும் கொலை !

அண்டை மாநிலங்களுக்கு
அரசி மட்டுமல்ல
மணலும் கடத்துகின்றனர் !

எச்சரிக்கை
இயற்கையைச் சிதைக்க
இயற்கை உன்னைச் சித்திக்கும் !



மணலின் பேராசை
விரைவில் அனுப்பும்
மண்ணிற்கு !

நூறு ஆண்டுகளில் உருவான மண்ணை
சில நிமிடங்களில் கடத்திக் காசாக்கும்
மனித மிருகங்கள் !

ஆறு எனும் அன்னையைச் சித்திக்கும்
அறிவில்லா மூடர்கள் திருந்தும் காலம்
நல்ல காலம் !

விலகுங்கள்
நேர்மையான அதிகாரிகள் பலரின்
உயிர் குடித்த கொடூரன் செல்கிறான்  !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்