தமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக ! கவிஞர் இரா .இரவி !


தமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக !  கவிஞர் இரா .இரவி !

தமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக ஒரே கல்லில் 6 மாங்காய்கள் என்பது போல ஒரே நூலில் 6 வகை பாக்கள் . "ஹைக்கூ முதற்றே உலகு " நூலில் ஹைக்கூ , சென்ரியு, லிமரைக்கூ ,பழமொன்ரியு ,லிமர்புன் ,துளிப்பா என  6 வகை பாக்கள் இடம் பெற்றுள்ளன .

தமிழ் ஹைக்கூ கவிதைக்கான முதல் இணையமான www.kavimalar.com  4.11.2003 அன்றே  தொடங்கி இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருபவர் கவிஞர் இரா .இரவி.
பல லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்த இணையம்.

  "ஆயிரம் ஹைக்கூ "நூல் எழுதி வானதி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு 1000 நூல்கள் நூலகத்திற்கு அனுப்பப்பட்டு, இரண்டாம் பதிப்பும் உடன் வெளிவந்தது .

ஹைக்கூ கவிதை குறித்து  மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

சாகித்ய அகாதமி சார்பில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தொகுத்த" ஆயிரம் ஹைக்கூ "நூலில் கவிஞர் இரா .இரவி எழுதிய 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றன .

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலில் 2014 ஆண்டில் இரண்டாம் முறையாக இரண்டு ஹைக்கூ இடம் பெற்றுள்ளன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் இவரது 9 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன .

விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில் இவரது 2 ஹைக்கூ இடம் பெற்றுள்ளன.
------------------------------
-------
முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப. அவர்கள் பாக்யா வார இதழில் கவிஞர் இரா .இரவி பற்றி எழுதிய கருத்துக்கள் நூலின் தோரண வாயிலாக இடம் பெற்றுள்ளது .

தமிழகஅரசின் முத்தமிழ்க் காவலர் கி .ஆ .பெ .விசுவநாதம் விருது பெற்ற தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை இடம் பெற்றுள்ளது .

ஓவியர் இரா .அன்பழகன் வரைந்து உதவிய அழகிய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன .

நூல் அட்டை வானதி பதிப்பகத்தின் ஆஸ்தான வடிவமைப்பாளர் இனிய நண்பர் குகன் கை வண்ணத்தில் வந்துள்ளது .

புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக வந்து விட்டது .
உங்கள் பிரதிக்கு முந்துங்கள் .தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
இணையம் www.vanathi.in

கருத்துகள்