தினமணி இணையம் தந்த தலைப்பு !
சுடும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் உண்டு
நினைத்தாலே சுடும் நினைவுகள் உண்டு !
ஈழத்தில் நடந்த நிகழ்வுகள் சுடும் நினைவுகள்
ஈழத்தமிழரைக் கொன்று குவித்த கொடூரங்கள் !
போரில்லாப் பகுதி என்று அறிவித்துக் குவித்து
போர் புரிந்தான் நிராயுதபாணிகளிடம் !
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வேதனையில் வீழ்த்தி கொன்று மகிழ்ந்தான் !
கொத்துக் குண்டுகளை வீசிக் கொன்றான்
கொத்துக் கொத்தாய் தமிழனத்தைக் கொன்றான் !
மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசினான்
மகளிர் மீதும் ஏறி குண்டுகளை வீசினான் !
குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினான்
கொடூரத்தின் உச்சம் சென்று கூத்தாடினான் !
ஈவு இரக்கமின்றி படுகொலைகள் புரிந்தான்
இனப்படுகொலையை நடத்தி முடித்தான் !
தேனீக்களின் கூட்டில் தீ வைத்தது போலவே
தமிழர்களின் வாழ்விடங்களுக்கு தீ வைத்தான் !
குருவிக்கூட்டில் கல் எறிவது போலவே
கொடூரமாகத் தமிழர்களைக் கொன்று குவித்தான் !
வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வைக்கவில்லை
வழியில் கண்டவர்களை எல்லாம் கொன்றான் !
சொந்த நாட்டு மக்களையே கொன்று மகிழ்ந்தான்
சோகத்தில் பலரையும் ஆழ்த்தி மகிழ்ந்தான் !
அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தான்
அடுத்து என்ன நடக்கும் அச்சத்தில் தினம் சாகிறான் !
மறக்க நினைத்தாலும் முடியவில்லை எமக்கு
மனம் வலிக்கின்றது நினைக்கின்ற போதினில் !
--

கருத்துகள்
கருத்துரையிடுக