40 வது பிறந்த நாள் ( 12.12.2015 ) காணும் மின்மினி இதழ் ஆசிரியர், இனிய நண்பர் கன்னிக் கோவில் இராஜாவிற்கு வாழ்த்துக்கள் .


40 வது பிறந்த நாள் (  12.12.2015 ) காணும்  மின்மினி இதழ் ஆசிரியர், இனிய நண்பர் கன்னிக் கோவில் இராஜாவிற்கு  வாழ்த்துக்கள் .

கவிஞர் கன்னிக் கோவில்  இராஜா வாழ்க பல்லாண்டு !

கவிஞர் இரா .இரவி !

பிறந்த பகுதியான கன்னிக்கோவில்  என்பதை
பிறந்தமண் பற்றோடு பெயரோடு இணைத்தவர் !

ஹைக்கூ  கவிதை உலகில் சாதனைகள் புரிந்தவர்
லிமர்புன் வகையை தமிழில் அறிமுகம் செய்தவர் !

இராஜாக்கள் ஹைக்கூ நூலை தொகுத்தவர்
இராஜாங்கமே ஹைக்கூவில் நிகழ்த்தியவர் !

மின்மினி இதழ் வழி ஹைக்கூ வளர்ப்பவர்
மின்னலென விரைவாக செயல்கள் செய்பவர் !

நண்பர்களின் படத்துடன் நாட்காட்டி வெளியிட்டவர்
நாளும் பயன்படும் சாவிக்கொத்தில் ஹைக்கூ பதித்தவர் !

விசிறியிலும் ஹைக்கூ அச்சிட்ட புதுமையாளர் 
வித்தியாசமான செயல்களை வெற்றியோடு முடிப்பவர் !

" ஆயிரம் ஹைக்கூ " நூலை அழகுற வடிவமைத்தவர் !
அன்பால் நண்பர்கள் உள்ளங்களைக் கொள்ளை அடித்தவர் !

சிறுவர் இலக்கியத்தில் விருதுகள் பெற்றவர் !
சிறுவர்களின் விருப்பத்திற்குப் பாத்திரமானவர் !

சிறுகதை எழுதுவதில் புதுப்பாணி வகுத்தவர்
சித்திக்க வைத்து சிந்தையைச் செதுக்கியவர் !

நாற்பது வயதில் அடியெடுத்து வைக்கும் கவிஞர்
நல்ல நண்பர் கன்னிக்கோவில்  இராஜா வாழ்க பல்லாண்டு !

.

கருத்துகள்