ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ ! சென்ரியு !  கவிஞர் இரா .இரவி !

அசைவத்தை வென்றது
சைவ விலையேற்றம்
துவரம் பருப்பு !

வட்டிக்கு வாங்கி
ஒரு நாள் மகிழ்ச்சி
தீபாவளி !

சாதி மதம்  மறந்திடுக
சாதிக்க நினைத்திடுக
சமுதாயம் சிறக்கும் !

சாரல்
மழை நின்றபின்னும்
மரத்திலிருந்து !

விவேகமன்று
அதிக வேகம்  
விபத்து !

வாழ்நாள்  நீட்டிப்பு
கவனம்
சாலையில் !
வேண்டாம் வெறி
விலங்காக மாறாதே
வாழ்க  மனிதனாக !

மாண்ட உயிர்
மீண்டும் வருவதில்லை
வேண்டாம் கொலை !

கற்பிக்கப்பட்ட
கற்பனை
பேய்  பிசாசு !

நாடு கடத்துவோம்
பேய்ப்பட
இயக்குனர்களை !

கடமை
பண்படுத்துதல்
படைப்பாளிக்கு !

நீதி நெறி
கற்பிப்பவரே
எழுத்தாளர் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்