மேதகு அப்துல் கலாம் !
கவிஞர் இரா. இரவி !
மற்ற மேதகு எல்லாம் பெயருக்குத்தான் மேதகு !
மாமனிதர் அப்துல் கலாமிற்கான மேதகுதான் உண்மை !
மாமனிதர் அப்துல் கலாமிற்கான மேதகுதான் உண்மை !
ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் அறியாத எளியவர் !
அனைவரின் உள்ளம் வாழும் நல்லவர் !
அனைவரின் உள்ளம் வாழும் நல்லவர் !
உலகப் பொதுமறையின் வெற்றிக்கு வழிவகுத்தவர் !
உலகம் போற்றிய இராமேசுவரத்துப் பச்சைத் தமிழர் !
உலகம் போற்றிய இராமேசுவரத்துப் பச்சைத் தமிழர் !
நூலகரை மதித்து பதவிஏற்பு விழாவிற்கு அழைத்தவர் !
நூல்களை மதித்து இல்லத்தில் நூலகம் அமைத்தவர் !
நூல்களை மதித்து இல்லத்தில் நூலகம் அமைத்தவர் !
குடியரசுத் தலைவர் பதவிக்கும் மேலாக !
கற்பிக்கும் பேராசிரியர் பணியினை விரும்பியவர் !
கற்பிக்கும் பேராசிரியர் பணியினை விரும்பியவர் !
மாணவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தவர் !
மாணவர்களின் வெற்றிக்கு இறுதிமூச்சு வரை உழைத்தவர் !
மாணவர்களின் வெற்றிக்கு இறுதிமூச்சு வரை உழைத்தவர் !
பேக்கரும்பில் பேசாமல் படுத்து இருந்தாலும் !
பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் அவரைப்பற்றி !
பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் அவரைப்பற்றி !
தன்னலமின்றி பொதுநலமாக வாழ்ந்ததால் !
தரணியில் மறைந்தும் வாழ்கிறால் மனங்களில் !
தரணியில் மறைந்தும் வாழ்கிறால் மனங்களில் !
மனிதநேய மாமணியாக வாழ்ந்திட்ட வல்லவர் !
மனிதர்களை மதிக்கும் மாண்புகள் கொண்டவர் !
மனிதர்களை மதிக்கும் மாண்புகள் கொண்டவர் !
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய மாமனிதர் !
முற்றும் துறந்த முனிவர்களையும் வென்றவர் !
முற்றும் துறந்த முனிவர்களையும் வென்றவர் !
மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்தவர் !
மூளையை அறிவியலுக்கு முற்றாகப் பயன்படுத்தியவர் !
மூளையை அறிவியலுக்கு முற்றாகப் பயன்படுத்தியவர் !
காந்தியடிகளுக்குப் பிறகு உலகமே நேசித்த புனிதர் !காந்தியடிகளுக்கு
இணையாக மக்களை நேசித்த மாமனிதர் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக