கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 15 வது நூலான " ஹைக்கூ முதற்றே உலகு " அச்சுப்பணி நடந்து வருகிறது!


கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 15 வது நூலான " ஹைக்கூ முதற்றே உலகு " அச்சுப்பணி நடந்து வருகிறது!
கவிஞர் இரா .இரவி எழுதி வானதி பதிப்பகம் வெளியீடாக "ஆயிரம் ஹைக்கூ" , "புத்தகம் போற்றுதும்" ,"கவியமுதம் " வந்தன .
ஆயிரம் ஹைக்கூ நூல் நூலகங்களுக்கு 1000 பிரதிகள் சென்றன .வாசகர்களிடமும், இலக்கிய ஆர்வலர்களிடமும் இருந்து வந்த வரவேற்பின் காரணமாக வெகு விரைவில் ஆயிரம் ஹைக்கூ இரண்டாம் பதிப்பும் வெளி வந்தது .
இவ்வெற்றியின் தொடர்ச்சியாக கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 15 வது நூலான " ஹைக்கூ முதற்றே உலகு " அச்சுப்பணி நடந்து வருகிறது .வானதி பதிப்பகம் வெளியீடாக வர உள்ளது.
வழக்கம் போல இந்த நூலிற்கு பெயர் சூட்டி அணிந்துரை வழங்கி உள்ளவர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் .
முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் பாக்யா வார இதழில் கவிஞர் இரா .இரவி பற்றி எழுதியவை நூலிற்கு தோரண வாயிலாக இடம் பெறுகின்றது .
.
ஓவியங்கள் உதவி கவிஞர் கன்னிக்கோயில் இராஜா !

கருத்துகள்