வரலாற்று சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில்
பேராசிரியர் முனைவர் மு .பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ. சிவசங்கர் அவர்கள் ( M.PHILL ) ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக " கவிஞர் இரா .இரவியின் ஹைகூக் கவிதைகள் " என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்து ஒரு ஆய்வேடு எனக்கும் அனுப்பி உள்ளார். அவருக்கும் ,பேராசிரியர் முனைவர் மு .பாண்டி அவர்களுக்கும், அழகப்பா பல்கலைக் கழகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி .விரைவில் ஆய்வேடு இணையத்தில் காணலாம் .
.
குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி சென்று படிக்க வில்லை. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் வணிகவியல் ( B.COM ) பயின்றேன் .கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போனதே என்ற ஏக்கத்தை நிறைவு செய்து மகிழ்ச்சி அளித்தது இந்த ஆய்வேடு .
கருத்துகள்
கருத்துரையிடுக